PM Modi: இந்திய ஒலிம்பிக் வீரர்களை நேரில் பாராட்டிய பிரதமர்; உயர்தர விளையாட்டு கட்டமைப்பு உருவாக்க உறுதி..!
Narendra Modi Meet Olympian: பாரிஸ் ஒலிம்பிக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன்தான் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய குழுவினருடன் பிரதமர் மோடி நேரில் கலந்துரையாடினார்.
இந்திய ஒலிம்பிக் குழுவினருடன் பிரதமர்:
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்தியக் குழுவினருடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார். புதுதில்லியில் அவர்களைச் சந்தித்த மோடி, விளையாட்டு அனுபவங்களைக் கேட்டறிந்ததுடன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினார்.
பாரிஸ் சென்ற ஒவ்வொரு வீரரும் சாம்பியன் என்று மோடி கூறினார். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும், உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார். தொடர்ச்சியாக எக்ஸ் பதிவுகளில், பிரதமர் கூறியதாவது; "பாரிஸ் ஒலிம்பிக்கில் நம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய குழுவினருடன் கலந்துரையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது.
உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு:
It was a delight to interact with the Indian contingent that represented our nation in the Paris Olympics. Heard their experiences from the games and lauded their feats on the sports field. pic.twitter.com/e0NmcbULYD
— Narendra Modi (@narendramodi) August 15, 2024
விளையாட்டுகளில் இருந்து அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்தேன், விளையாட்டுத் துறையில் அவர்களின் சாதனைகளைப் பாராட்டினேன். பாரிஸுக்குச் சென்ற ஒவ்வொரு வீரரும் ஒரு சாம்பியன். இந்திய அரசு தொடர்ந்து விளையாட்டுக்கு ஆதரவளிக்கும். உயர்தர விளையாட்டு உள்கட்டமைப்பு உருவாக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.