மேலும் அறிய

உலக அளவில் தொடர்ந்து கலக்கும் பிரதமர் மோடி... பிரபலமான தலைவர்களில் தொடர்ந்து முதலிடம்..!

மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 76 சதவிகித மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார் மோடி.

உலகின் மிகவும் பிரபலமான தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் 76 சதவிகித மக்களின் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார் மோடி. 

உலக அளவில் தொடர்ந்து கலக்கும் பிரதமர் மோடி:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட 22 உலக தலைவர்கள் அடங்கிய பட்டியலில் அனைவரையும் பின்னுக்கு தள்ளி உள்ளார் பிரதமர் மோடி.

இந்தாண்டு மார்ச் 22ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்பு எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்பதை விவரித்த மார்னிங் கன்சல்ட் நிறுவனம், "ஒவ்வொரு நாட்டிலும் வயது வந்த குடிமக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு நாட்டின் மாதிரி அளவும் வேறுபடுகிறது.

பைடன், ட்ரூடோவை பின்னுக்கு தள்ளிய மோடி:

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 41 சதவீத ஆதரவை பெற்ற  நிலையில், பிரதமர் மோடி 76 சதவீத ஆதரவை பெற்றுள்ளார். அதேபோல, மோடிக்கு எதிராக 18 சதவிகிதத்தினர் அதிருப்தியை பதிவு செய்துள்ளனர். ஜனவரி மாதம் மூன்றாம் வாரம், 79 சதவிகிதம் பேர் பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 61 சதவீத ஆதரவை பெற்று இரண்டாவது இடத்தையும், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 55 சதவீதத்தினரின் ஆதரவை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார். 

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரேசில் அதிபர் லூலா டி சில்வா ஆகியோர் தலா 49 சதவிகிதத்தினரின் ஆதரவை பெற்று நான்காவது இடத்தில் உள்ளனர்

இந்த பட்டியலில் 41 சதவீத ஆதரவை பெற்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆறாவது இடத்திலும் 39 சதவீத ஆதரவை பெற்றுள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 7ஆவது இடத்தையும்  இத்தாலியின் பிரதமராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீவிர வலதுசாரி தலைவரான ஜார்ஜியா மெலோனி, 52 சதவீத ஆதரவை பெற்று பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். 

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் 34 சதவீத ஆதரவை பெற்று பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். உக்ரைன் - ரஷ்ய போர் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்த நிலையில், இது போருக்கான காலம் என பிரதமர் மோடி பேசியது அனைவரின் வரவேற்பையும் பெற்றிருந்தது.

உக்ரைன் - ரஷ்ய போர் உலகையே மூன்றாவது உலக போரின் விளம்பில் கொண்டு போய் நிற்க வைத்தது. பெரும்பாலான நாடுகள், இவ்விரண்டில் ஒரு நாடுக்கு ஆதரவு தெரிவித்தன. ஆனால், இந்தியா மட்டும் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
"கிராம சபை கூட்டங்களில் இதை செய்யுங்கள் " திருமாவின் புது கணக்கு இதான் !
Embed widget