சாதனை.. ஒரே நாளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் கதர் பொருள்கள் விற்பனை.. பிரதமர் பாராட்டு!
டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 1 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள காதி பொருட்கள் விற்பனையாகியுள்ளது.
கதர்ப் பொருட்கள் விற்பனையில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி தினத்தன்று (அக்டோபர் 2ஆம் தேதி) டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் ஒரே நாளில் ரூ.2 கோடியே 1 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள காதி பொருட்கள் விற்பனையாகியுள்ளது.
கதர் விற்பனையில் புதிய சாதனை:
இதை, ஊக்கமளிக்கும் சாதனை என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார். நாட்டு மக்களிடையே உள்நாட்டு உற்பத்தி பொருட்கள் மீதான ஆர்வம் வேகமாக வளர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காதி இந்தியா வெளியிட்ட ஒரு பதிவுக்கு எக்ஸ் தளத்தில் அவர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, "மிகவும் ஊக்கமளிக்கும் சாதனை. சுதேசி நோக்கிய போக்கு நாட்டு மக்களிடையே எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை கதர் விற்பனையின் இந்தப் புதிய சாதனை காட்டுகிறது.
बहुत उत्साहवर्धक उपलब्धि! खादी की ब्रिकी का यह नया रिकॉर्ड बताता है कि देशवासियों के बीच स्वदेशी को लेकर रुझान किस तेजी से बढ़ रहा है। मुझे खुशी है कि यह भावना खादी से जुड़े हमारे कारीगर भाई-बहनों के जीवन को भी आसान बनाने में बहुत मददगार बनी है। https://t.co/blmN8RRGZq
— Narendra Modi (@narendramodi) October 5, 2024
கதரோடு தொடர்புடைய நமது கைவினைஞர் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை எளிதாக்குவதில் இந்த உணர்வு பேருதவியாக இருக்கிறது என்பதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கதர் இந்தியா வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடியின் செல்வாக்கால் மற்றொரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உள்நாட்டு மற்றும் உள்ளூர் பொருட்களை வாங்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்ததால், 'காந்தி பிறந்த தினத்தன்று டெல்லி கன்னாட் பிளேஸில் உள்ள காதி பவனில் ஒரே நாளில் 2 கோடியே 1 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதி பொருட்கள் விற்பனையானது.
இந்த விற்பனை காதி கைவினைஞர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய 'சர்க்கா புரட்சி' தற்போது 'வளர்ந்த இந்தியாவின் உத்தரவாதமாக' மாறியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.