என்னாது தக்காளி விலை இன்னும் குறையுமா? மத்திய அரசே சொல்லிடுச்சு!
தமிழ்நாட்டில் மோசமான வானிலை, போக்குவரத்து பிரச்னைகள், பயிர் பாதிப்பு, பழங்கள் அதிக அளவில் கெட்டுப்போவது போன்ற காரணங்களால் தக்காளி விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மண்டிகளில் விலை வீழ்ச்சி காரணமாக தக்காளியின் சில்லறை விலை சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி, அகில இந்திய சராசரி சில்லறை விலைகள் கிலோ ஒன்றுக்கு ரூ.52.35 ஆக இருந்தது.
தக்காளியின் விலை சரிவுக்கு காரணம் என்ன?
இது, அக்டோபர் 14ஆம் தேதி, கிலோ ஒன்றுக்கு ரூ.67.50-க்கு விற்கப்பட்டதை விட 22.4% குறைவு. அதே காலகட்டத்தில், ஆசாத்பூர் மண்டியின் மாதிரி விலை கிட்டத்தட்ட 50% அளவுக்கு குறைந்துள்ளது. தக்காளி வரத்து அதிகரிப்பால், குவிண்டால் ஒன்றுக்கு ரூ.5,883ல் இருந்து ரூ.2,969 ஆக குறைந்துள்ளது.
பிம்பால்கான், மதனப்பள்ளி மற்றும் கோலார் போன்ற முக்கிய சந்தைகளில் மண்டி விலையில் இதே போன்ற சரிவு பதிவாகியுள்ளது. வேளாண்மைத் துறையின் மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, 2023-24 ஆம் ஆண்டில் தக்காளியின் மொத்த ஆண்டு உற்பத்தி 213.20 லட்சம் டன்களாக கணிக்கப்பட்டது.
2022-23ல் இருந்த 204.25 லட்சம் டன்கள் என்ற அளவை விட இது 4% அதிகரிப்பு ஆகும். ஆண்டு முழுவதும் தக்காளி விளைந்தாலும், விளையும் பகுதிகளிலும், உற்பத்தியின் அளவிலும் பருவநிலை தாக்கம் ஏற்படுகிறது.
தமிழ்நாட்டில் என்ன நிலை?
பாதகமான வானிலை, போக்குவரத்து பிரச்னைகள், பயிர் பாதிப்பு, பழங்கள் அதிக அளவில் கெட்டுப்போவது போன்ற காரணங்கள், விலையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. கடந்த அக்டோபர் மாதம், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் அதிக, நீடித்த மழை காரணமாக தக்காளி விலை அதிகரித்தது.
மதனப்பள்ளி மற்றும் கோலாரில் உள்ள முக்கிய தக்காளி மையங்களில் தக்காளி வரத்து குறைந்தாலும், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து வரத்து காரணமாக நாடு முழுவதும் விநியோகத்தில் உள்ள இடைவெளியை நிரப்பி வருவதால், விலை குறைந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, வானிலை பயிருக்கு சாதகமாக உள்ளதாலும், வயல்களில் இருந்து விநியோகச் சங்கிலி மூலம் போதிய வரத்து பராமரிக்கப்படுவதாலும், நுகர்வோர் தேவை பூர்த்தியாகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், பெங்களூர் தக்காளி 1 கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க: JEE Main 2025: இன்னும் சில நாள்தான்; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிச்சுட்டீங்களா? எப்படி?