Presidential Election 2022: நோ சொன்ன சரத்பவார்! எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யார்? சூடு பிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்!
கூட்டத்துக்குப் பின் பேசிய மம்தா, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மம்தா தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் பேசிய மம்தா, குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவான ஒரு வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டுள்ளோம். வேட்பாளராக சர்த்பவாரை போட்டியிட முடிவு செய்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இது தொடர்பாக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளிடம் விவாதித்தோம் என்றார். இந்தக் கூட்டத்தில் 17 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்குபெற்றனர்.
Opposition leaders adopt a resolution to field a common candidate in the forthcoming Presidential election pic.twitter.com/XgCUFMzEIW
— ANI (@ANI) June 15, 2022
சரத்பவாரின் மறுப்பை அடுத்து கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகியோரிடமும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
18ஆம் தேதி வாக்குப்பதிவு
இதன்படி வரும் ஜூலை 18ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூன் 29ஆம் தேதி முடிவடைகிறது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30 ஆம் தேதி நடைபெறும் நிலையில், வேட்புமனுக்களை திரும்பப்பெற ஜூலை 2ஆம் தேதி கடைசிநாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 18ஆம் தேதி பதிவு செய்யப்படும் வாக்குகள் அனைத்தும் ஜூலை 21ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், புதிய குடியரசுத் தலைவர் வரும் ஜூலை 25ஆம் தேதி பதவி ஏற்பார் எனவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பிரமோத் சந்திர மோடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் வழங்கும் பேனா மூலமே வாக்குப்பதிவு





















