மேலும் அறிய
Advertisement
குடியரசு தலைவர் உடல்நிலை முன்னேறியதால் சிறப்பு வார்டுக்கு மாற்றம்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிறப்பு வார்டிற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மாளிகை தகவல் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நெஞ்சுவலி காரணமாக கடந்த 26ஆம் தேதி, டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ருந்தார். அதன்பிறகு, அங்கிருந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கடந்த 30ஆம் தேதி இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, அவர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஐ.சி.யூ. பிரிவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறினர். மேலும், அவரை ஓய்வு எடுக்குமாறும் அறிவுறுத்தினர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion