President Of India Salary : குடியரசு தலைவருக்கு அளிக்கப்படும் சலுகைகளும் பலன்களும் என்னென்ன?
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு கிடைக்கபோகும் அதிகாரங்கள், பலன்கள், சிறப்பு சலுகைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
நாட்டின் உச்சபட்ச அரசியலமைப்பு பதவியாக குடியரசு தலைவர் பதவி உள்ளது. முதல் குடிமகன் என்ற பெருமையோடு பதவியில் இருக்கும்போது பின்னரும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகளும் பலன்களும் வழங்கப்பட்டுள்ளன.
நல்ல சம்பளம், இலவச வீடு, மருத்துவம் என பல சலுகைகளுடன் குடியரசு தலைவராக பதவி வகிப்பவர்களுக்கு சில கடமைகளும் உள்ளன. கடந்த 2017 இல், குடியரசு தலைவரின் மாத ஊதியம் 1.5 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடியரசு தலைவராக திரௌபதி முர்மு இன்று பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு கிடைக்கபோகும் அதிகாரங்கள், பலன்கள், சிறப்பு சலுகைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
குடியரசு தலைவரின் ஊதியம் எவ்வளவு?
இந்திய குடியரசுத் தலைவருக்கு மாத சம்பளமாக ஏறத்தாழ 5 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது. குடியரசு தலைவர் சாதனை மற்றும் ஓய்வூதிய சட்டம், 1951, அடிப்படையில் இந்திய குடியரசு தலைவரின் ஊதியம் தீர்மானிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் அரசு அலுவலர், குடியரசு தலைவரே ஆவார்.
இந்திய அரசியலமைப்பின் இரண்டாவது அட்டவணையின்படி, முதலில், இந்திய குடியரசு தலைவருக்கு மாதம் 10,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது.
முன்னதாக, 1998இல், சம்பளம் 50,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இருப்பினும், சம்பளத்தை தவிர, பல கொடுப்பனவுகளும் வழங்கப்படுகிறது.
குடியரசு தலைவர் எங்கு வசிப்பார்?
எந்த ஒரு நாட்டின் உச்சபட்ச தலைவரும் வசிக்காத மிகப்பெரிய இல்லத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர் வசித்து வருகிறார்.
முகவரி - ராஷ்டிரபதி பவன், புது டெல்லி, குடியரசு தலைவர் தோட்டம்
முதலில் வைஸ்ராய் குடியிருப்பதற்காக இது கட்டப்பட்டது. பின்னர், ராஷ்டிரபதி பவனாக மாறியுள்ளது.
குடியரசு தலைவரின் பயண ஏற்பாடுகள் என்னென்ன?
இந்திய குடியரசு தலைவர் பயணிக்கும் கார்கள், காலம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதுப்பிக்கப்படும். அதே வேளையில், இவர்களின் கார்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது, அதன் மாடல் என்ன, பதிவு எண்கள் ஆகியவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரின் கார்களுக்கு உரிமத் தகடு வைக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக தேசிய சின்னமான அசோக சின்னம் பொறிக்கப்படும்.
குடியரசு தலைவரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்னென்ன?
குடியரசு தலைவரின் மெய்க்காப்பாளர் (பிபிஜி) குடியரசு தலைவருக்கு பாதுகாப்பை வழங்கு வருகின்றன. பிபிஜி, இந்திய ஆயுதப் படைகளில் மிகவும் மூத்தது மட்டுமல்ல, பழமையான பிரிவும் ஆகும். மேலும் இது, உலகின் ஒரே குதிரை சவாரி இராணுவப் பிரிவாகும். பொதுவாக, குடியரசு தலைவரின் மெய்க்காப்பாளர்கள் வழக்கமான பிரிவாக செயல்படுவர். இருப்பினும், இவர்கள் பயிற்சி பெற்ற பராட்ரூப்பர்களாக இருப்பதால், போர்க்காலத்தில் இவர்கள் படை வீரர்களாகவும் பயன்படுத்தப்படலாம்.
பதவி காலத்திற்கு பிறகு குடியரசு தலைவருக்கு கிடைக்கும் பலன்களும் சலுகைகளும்
- ஓய்வூதியம் - மாதம் 1.5 லட்சம் ரூபாய்
- குடியரசு தலைவரின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு மாதம் 30,000 ரூபாய் வழங்கப்படும்.
- அலங்காரம் செய்யப்பட்ட வாடகை இல்லாத பங்களா
- இரண்டு லேண்ட்லைன்கள் மற்றும் மொபைல் ஃபோன் கட்டணம்
- ஐந்து தனிப்பட்ட பணியாளர்கள்- பணியாளர் செலவுகளுக்காக ஆண்டுக்கு 60,000 ரூபாய் வழங்கப்படும்.
- குடியரசு தலைவரும் அவருடன் பயணம் செய்யும் ஒருவருக்கு இலவச ரயில் அல்லது விமானப் பயணம்.