மேலும் அறிய

தசரா விழாவில் கர்நாடகாவை ஏகபோகத்துக்கு புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்!

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நகரவாசிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரைப் பாராட்டியதன் மூலம், அவர்கள் இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியதாகக் கூறினார்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மைசூரு சாமுண்டி ஹில்சில் மைசூரு தசரா பண்டிகையை  இன்று  தொடங்கிவைத்தார்.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் மைசூரு தசரா பண்டிகை வாழ்த்துக்களை கர்நாடகா மக்களுக்கு  தெரிவித்தார். அனைவருக்கும் சாமுண்டீஸ்வரி கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்க தாம் பிரார்த்திப்பதாக கூறினார்.

நமது  நாட்டை முனிவர்கள் மற்றும் மக்கள் பண்டிகைகள் மூலம் பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகத்தை  ஒருங்கிணைத்துள்ளதாக  தெரிவித்தார்.

நாடு முழுவதும் ராமாயணம், மகாபாரதம், புராணங்கள், வரலாறு மற்றும் நாட்டுப்புறக் கதைகளில் இருந்து தெய்வீக மற்றும் மனித கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. இந்த விழாக்களில் பன்முகத்தன்மை மற்றும் இவற்றில் ஒற்றுமையும் உள்ளது என்று அவர் கூறினார். மைசூரு தசரா இந்திய கலாச்சாரத்திற்கு பெருமை சேர்க்கும் விழாவாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

கர்நாடகாவின் வளர்ச்சிப் பயணம் குறித்துப் பேசிய குடியரசுத் தலைவர், 2021-22 நிதியாண்டில், ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் துறையில் மொத்த அன்னிய நேரடி முதலீட்டில் 53 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்தது என்று குறிப்பிட்டார். இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்-அப் மையமாக பெங்களூர் கருதப்படுவதாக கூறினார். நிதிக் ஆயோக் நீடித்த வளர்ச்சி, இலக்குகள் - இந்தியா குறியீட்டு எண் -2020-21ன் படி, புதுமைக் கண்டுபிடிப்பு குறியீட்டில் நாட்டிலேயே  கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. தொடக்கக் கல்வியில் 100 சதவீத மாணவர் சேர்க்கை இலக்கை கர்நாடகா எட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பிரதமரின் கிராமிய சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் 100 சதவீத இணைப்பு இலக்கை எட்டியுள்ளது என்று கூறிய அவர், இதுபோன்ற பல சாதனைகள் மூலம் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த கர்நாடக அரசு மற்றும்  அம்மாநில மக்களை அவர் பாராட்டினார்.

தசரா விழாவில் கர்நாடகாவை ஏகபோகத்துக்கு புகழ்ந்து தள்ளிய குடியரசுத் தலைவர்!

 பின்னர், ஹூபாலியில் ஹூப்ளி-தர்வாட் நகராட்சி  ஏற்பாடு செய்த “பூர சன்மனா” என்ற பாராட்டு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், நகரவாசிகள் அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும் அவரைப் பாராட்டியதன் மூலம், அவர்கள் இந்திய குடியரசுத் தலைவரை மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மகள்களையும் பாராட்டியதாகக் கூறினார்.

ஹூப்ளி-தார்வாட் இரட்டை நகரங்கள் கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் புகழ்பெற்ற வரலாற்றின் ஒரு பகுதியாகும் என்றும், இந்தியாவின் கலாச்சார வரைபடத்தில் அவை இருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் குடியரசுத் தலைவர் கூறினார். கர்நாடகாவின் வடக்கு பகுதியில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய பல பிரபலமான கல்வி மையங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து தார்வாட்டில் உள்ள தார்வாட் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தின் புதிய வளாகத்தை குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், தார்வாட் இந்திய தொழில்நுட்பக் கழகம் கல்வி வாயிலாக நமது நாட்டின் எதிர்காலத்தை தயார் செய்து நமக்கு பெருமை அளிப்பதாக குறிப்பிட்டார். இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையம் என்று குறிப்பிட்டார்.

இந்த முயற்சிகளுக்காக மத்திய அரசு, கர்நாடக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறையினரை பாராட்டுவதாக கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே.. இதற்கு இன்றே கடைசி; மறந்துடாதீங்க- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
UGC NET: ’’பொங்கலையே குறிவைக்கும் மத்திய அரசு’’ யுஜிசி நெட் தேர்வை தள்ளிவைக்கக் கோரிக்கை!
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Prithvi Shaw: ”6 மணி ஆனால் போதும், ஆளையே பார்க்க முடியாது..”பிரித்வி ஷாவை கிழித்து விட்ட MCA நிர்வாகி
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
Watch Video: மக்களை மிரட்டும் டிங்கா டிங்கா வைரஸ்! ஆட்டம் அதிகமா இருக்கே - புதுசு புதுசா கிளம்புதே?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
PM Modi: 43 ஆண்டுகளில் முதல்முறை..! குவைத்தில் பிரதமர் மோடி சம்பவம், என்ன விசேஷம் தெரியுமா?
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Breaking News LIVE: மக்களவை புத்தாண்டு காலண்டரில் இடம்பெறாத அம்பேத்கர், காந்தி புகைப்படம்
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Wrestler Rey Mysterio: 90ஸ் கிட்ஸ் ஷாக்.. பிரபல WWE மல்யுத்த வீரர் ரே மிஸ்டீரியோ காலமானார் - மறக்க முடியுமா அந்த ஜாம்பவானை..!
Embed widget