(Source: ECI/ABP News/ABP Majha)
பெண்களுக்கான ஊட்டச்சத்து.. மகாராஷ்டிரா டாப்.. தமிழ்நாட்டை பின்னுக்கு தள்ளியதா உ.பி.?
ஊட்டச்சத்து மாதம் மூலம் குழந்தைகள், இளம் சிறார்கள், பெண்களுக்கான ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், 'ஊட்டச்சத்து மாதம் 2024' நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, ஊட்டச்சத்து மாதம் இயக்கத்தின் 7 வது கட்டத்தில் ரத்த சோகை தடுப்பு, வளர்ச்சி கண்காணிப்பு, நல்ல நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் பயனுள்ள சேவை வழங்குதல், துணை ஊட்டச்சத்து போன்ற முக்கியமான கருப்பொருள்களில் கவனம் செலுத்தப்படுகிறது.
கடந்த 2018 முதல், 6 ஊட்டச்சத்து மாதம் மற்றும் ஊட்டச்சத்து இருவார விழாக்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. தற்போது 7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம் நடந்து வருகிறது. பல்வேறு கருப்பொருள்களின் கீழ் இந்த விழிப்புணர்வு இயக்கங்களின்போது ஊட்டச்சத்தினை மையமாகக்கொண்ட 10 கோடிக்கும் அதிகமான உணர்திறன் நடவடிக்கைகள் பதிவாகியுள்ளன.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் 7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024, ஊட்டச்சத்து பற்றிய உரையாடலுக்குப் புதிய ஆற்றலைக் கொண்டுவந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான ஒரு இயக்கமாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ரத்த சோகை இல்லாத இந்தியா:
ரத்த சோகையைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த முயற்சி நாடு முழுவதும் தாய் மற்றும் குழந்தையின் சுகாதார விளைவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. 2024, ஆகஸ்ட் நிலவரப்படி, இந்தியாவில் 95% கருவுற்றப் பெண்களுக்கும், 65.9% பாலூட்டும் தாய்மார்களுக்கும் ரத்த சோகையை எதிர்த்துப் போராட 180 இரும்பு மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு கருப்பொருளில் குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முக்கிய அம்சமான இணை உணவும் அடங்கும். 6 மாதக் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்குவதை விட ஆற்றல் மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவை அதிகமாக இருக்கும்.
அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இணை உணவுகள் அவசியம். இந்த வயதில் ஒரு குழந்தை தாய்ப்பால் தவிர மற்ற உணவுகளுக்கும் தயாராக உள்ளது. இணை உணவளிக்கும் காலத்தில், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டின் அதிக ஆபத்தில் உள்ளனர். எனவே, தொடங்கும் காலம், ஊட்டச்சத்தின் தரம், இணை உணவின் அளவு, எத்தனை முறை இணைத்து உணவளிக்கப்படுகிறது என்பது குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.
ஊட்டச்சத்து மாதத்தின் தாக்கம்:
7 வது தேசிய ஊட்டச்சத்து மாதம் இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத பங்கேற்பைக் கண்டுள்ளது. இது ஊட்டச்சத்து விளைவுகளை, குறிப்பாக குழந்தைகள், இளம் சிறார்கள், பெண்களுக்கான ஊட்டச்சத்து விளைவுகளை, மேம்படுத்த நாட்டின் வலுவான உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது.
நாடு முழுவதும் 9.22 கோடிக்கும் அதிகமான செயல்பாடுகளுடன், அடித்தள நிலையில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் தலையீடுகளை ஏற்படுத்த சமூகங்கள், அரசு முகமைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளை ஈடுபடுத்துவதன் மூலம் ஊட்டச்சத்து மாதம் 2024 உண்மையில் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
ஊட்டச்சத்து மாதம் 2024-ல் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள்
மகாராஷ்டிரா: குறிப்பிடத்தக்க வகையில் 1.80 கோடி நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து முன்னிலையில் உள்ளது .
பீகார்: அடுத்ததாக, பீகார் 1.17 கோடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மத்தியப் பிரதேசம்: 79.32 லட்சம் செயல்பாடுகளுடன், சமூகங்களை சென்றடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.
உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேசம் 70.28 லட்சம் நடவடிக்கைகள் மூலம் அதிக அளவிலான மக்களைத் தீவிரமாக ஈடுபடுத்தியது.
குஜராத்: குஜராத்தும் 66.76 லட்சம் செயல்பாடுகளுடன் பட்டியலில் இணைந்துள்ளது.
கூடுதலாக, ஆந்திரப் பிரதேசம் 65.54 லட்சம் நடவடிக்கைகளுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பய்ச் செய்துள்ளது.
ஆந்திராவுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு இடம் பிடித்துள்ளது.