நல்லிணக்கம்.. நல்லுறவு.. ஐக்கிய அமீரக அதிபருக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதம்..
ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.
ஐக்கிய அமீரக எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். இருநாட்டு நல்லுறவை பேணுவது தொடர்பாகவும், ஒருமித்த விருப்பங்கள் உடைய துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்தும் அந்தக் கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. இந்தக் கடிதத்தை அரசு முறை பயணமாக அபுதாபி சென்றிருந்த வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் அதிபரிடம் ஒப்படைத்தார். அந்த கடிதம் ஒப்படைக்கும் நிகழ்வுடன் அவரது அமீரக பயணம் நிறைவு பெற்றது.
இந்தியா யுஏஇ இடையே மூன்றாவது முறையாக நடைபெறும் இருநாட்டு நல்லுறவு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெய்சங்கர் சென்றிருந்தார்.
மத்திய கிழக்கின் முதல் இந்து கோயில்:
இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது அபுதாபி இந்து கோயில் பணிகளை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டது. அபுதாபியின் முதல் இந்து கோயிலின் இடத்தை அமைச்சர் ஜெய்சங்கர் பார்வையிட்டார். இது அபுதாபியில் மட்டுமல்ல மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கற்கோயில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கோயில் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படுகிறது. அங்கே பார்வையிட்ட அமைச்சர் ஜெய்சங்கர், கோயிலைக் கட்டுவதில் இந்தியர்களின் முயற்சிகளையும் பாராட்டினார். பின்னர் இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், விநாயகர் சதுர்த்தி அன்று அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்துக் கோயிலுக்குச் சென்றதால் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். கோயில் பணிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்து, சம்பந்தப்பட்ட அனைவரின் பக்தியையும் ஆழ்ந்து பாராட்டுகிறேன் என பதிவிட்டிருந்தார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் கட்டப்பட்டு வரும் ஹிந்து கோவில், அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான சின்னம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் அமையும் இந்தக் கோயில் சுமார் 55,000 சதுர மீட்டர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்தக் கோவில் கைவினைக் கலைஞர்களால் பணிகள் நடைபெற உள்ளன.
அதனைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு அமைசர் ஷேக் அப்துல்லா பின் சயீத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா, யுஏஇ உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு கண்டனம்:
முன்னதாக முஸ்லிம்களின் இறைத்தூதரான நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த போது ஐக்கிய அரபு அமீரகம் முதல் நாடாக தனது எதிர்ப்பை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. யுஏஇ கண்டனத்தைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகள் பலவும் இந்தியாவுக்கு இவ்விவகாரத்தில் கண்டனம் தெரிவித்தன.இந்நிலையில் ஜெய்சர் மேற்கொண்ட இந்தப் பயணமும், பிரதமர் கொடுத்தனுப்பியுள்ள கடிதமும் இருநாட்டு நல்லுறவை புதுப்பிக்கும் வகையில் அமைந்திருக்கும் என்று கூறப்படுகிறது.