மேலும் அறிய

இந்தியாவை அடுத்தகட்டத்திற்கு எடுத்தும் செல்லும் 6ஜி.. தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்ட பிரதமர் மோடி..!

இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

வேகமான தொழில்நுட்ப வளர்ச்சி, உலகை அடுத்தக்கட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளது. அந்த வகையில், இன்றைய நவீன உலகில் மிக மிக்கிய தொழில்நுட்பமாக கருதப்படும் இணையம் பல்வேறு வகைகளில் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது.

கடந்தாண்டு, அக்டோபர் மாதம் 1ஆம் தேதி, இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. 5ஜி அலைக்கற்றையை ஏலத்தில் மொத்தம் ₹ 1.50 லட்சம் கோடிக்கு ஏலம் விட்டது டெலிகாம் துறை.

பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணத்தை வெளியிட்ட பிரதமர்:

இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையிலான பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணத்தை பிரதமர் மோடி இன்று வெளியிட்டுள்ளார்.

அதேபோல, 6ஜி சேவைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனை தளத்தையும்  (6G Test bed) இன்று திறந்து வைத்துள்ளார். இந்தியாவில் 6ஜி தொழில்நுட்பத்தை வேகமாக ஏற்றுக்கொள்ள வைப்பதில் இந்த ஆவணம் முக்கிய பங்கு வகிக்க உள்ளது. 

பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணம் என்றால் என்ன?

பாரத் 6ஜி தொகைநோக்கு ஆவணம், தொழில்நுட்ப கண்டுபிடிப்பு குழுவால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், இந்தியாவில் 6Gக்கான திட்ட வரைபடம் மற்றும் செயல் திட்டங்களை தயாரிப்பதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 

பல்வேறு அமைச்சகங்கள்/துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களின் வல்லுநர்கள், கல்வித்துறை, தரநிலை அமைப்புகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வணிகர்கள் இந்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

6G Test bed என்றால் என்ன?

கல்வி நிறுவனங்கள், தொழில்துறை, ஸ்டார்ட்-அப்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் தொழில்துறை போன்றவற்றுக்கு, வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத்தை சோதித்து சரிபார்க்க தளம் வழங்க 6G டெஸ்ட் பெட் பயன்படுகிறது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் பேசிய பிரதமர் மோடி, "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் 6ஜியை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. இளைஞர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுமையான தீர்வுகளைக் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தலைப்பு செய்திகள்

பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
பெங்களூரு மக்களுக்கு குட் நியூஸ்! சடஹள்ளியில் உருவாகும் பிரம்மாண்ட சுரங்கப்பாதை!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
சென்னைக்கு ரூ.3,109 கோடி குடிநீர் திட்டம்! இன்று தமிழகத்தில் நடந்த 10 முக்கிய செய்திகள் இதோ!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !
தீபாவளி பண்டிகைக்காக UPI MDR கட்டணம் ஒத்திவைப்பு ! வணிகர்களுக்கு பெரும் நிம்மதி !

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
Actor Sarathkumar : ’தமிழக பாஜக தலைவராகிறார் நடிகர் சரத்குமார்?’ எல்.முருகனுக்கும் முக்கிய பொறுப்பு..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
’100 கோடி ரூபாய் முறைகேடு வழக்கு’ முன் ஜாமீன் கோரினார் அன்பில் மகேஷ்..!
Jailer 2 Review: இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
இரண்டாம் பாதியில் சொதப்பிய ஜெயிலர் 2? தாராளமாய் குவிந்த கேமியோக்கள்? ரஜினி படம் எப்படி?
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
E-bus Tender: 11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
11 முறை முயற்சித்தும் தோல்வி..! 1,220 மின்சார பேருந்துகளுக்கான டெண்டர் ரத்து - பிரச்னை தான் என்ன?
Embed widget