PM Modi:பிரதமரிடம் சரமாரி கேள்வி! காஷ்மீரில் இணைய முடக்கம் ஏன்? புலனாய்வை தவறாக பயன்படுத்துகிறீர்களா? மோடியின் பதில்
PM Modi: சட்டப்பிரிவு 370ஐ நீக்கினால் தீ மூட்டும் என நினைத்தார்கள், ஆனால் 370வது நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஏ.என்.ஐ செய்தி முகமைக்கு பேட்டியளித்தார். அதில் சட்டப்பிரிவு 370 நீக்கத்தின் போது ஏன் இணைய முடக்கம் செய்யப்பட்டது என்றும் மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ் நீக்கப்பட்டது குறித்தும், புலனாய்வு பிரிவை தவறாக பயன்படுத்துகிறீர்களா? என்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டப்பிரிவு 370 நீக்கத்தின்போது ஏன் இணைய முடக்கம் செய்யப்பட்டது? என்ற கேள்விக்கு
பிரதமர் மோடி தெரிவித்ததாவது, சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு அரசாங்கத்தை நடத்த சில உத்திகளை செயல்படுத்த காஷ்மீரில் இணையத்தை முடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது, கடந்த ஐந்து ஆண்டுகளாக இணையம் நிறுத்தப்படவில்லை, கடந்த 5 ஆண்டுகளாக அனைத்து வசதிகளையும் பெற்று வருகிறோம் என்று அங்குள்ள குழந்தைகள் பெருமையுடன் கூறுகிறார்கள். சில நாட்களாக சிரமம் இருந்தது, ஆனால் அது ஒரு நல்ல காரணத்திற்காக இருந்தது என இணைய நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி தெரிவித்தார்.
#WATCH | On high voter turnout in Kashmir, PM Narendra Modi says, "First of all, I would like to pray to the justice system of our country that if the government wants to do any work, they have a design, strategy to do that work. To solve such problems, work had to be done under… pic.twitter.com/C2Qhar0BsT
— ANI (@ANI) May 28, 2024
நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில், காஷ்மீரில் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. இது, கடந்த ஐந்தாண்டுகளில், பாஜக அரசின் செயல்திறனுக்கான சான்றாகும். முதலில் காஷ்மீர் மக்களே 370 வது பிரிவை விரும்பவில்லை, சட்டப்பிரிவு 370 என்பது 4-5 குடும்பங்களின் செயல்திட்டமாக இருந்தது, அவர்களின் நலனுக்காக இருந்தது.
அவர்கள் 370 என்ற சுவரைக் கட்டியிருக்கிறார்கள், 370ஐ நீக்கினால் தீ மூட்டும் என நினைத்தார்கள். ஆனால் 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களிடையே ஒற்றுமை உணர்வு அதிகரித்து வருகிறது என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. தேர்தல் முடிவில் தெரியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஓபிசி சான்றிதழ் ரத்துக்கு, பாஜக வரவேற்பு தெரிவித்திருக்கிறதே? என்ற கேள்வி
மேற்கு வங்கத்தில் உள்ள 77 சமூகங்களுக்கு, OBC சான்றிதழை ரத்து செய்து கல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில் பெரும்பாலும் முஸ்லிம் சமூகத்தினர் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. தீர்ப்பு மம்தா பானர்ஜி அரசுக்கு பேரிடையாக விழுந்தது.
இது குறித்து பிரதமர் மோடி கருத்துத் தெரிவித்ததாவது, கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்ததும், “பெரிய மோசடி” நடப்பது தெரிய வந்தது. ஆனால், அதைவிட துரதிர்ஷ்டவசமானது என்னவென்றால் வாக்கு வங்கி அரசியலுக்காக, இப்போது நீதித்துறையையும் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இந்த நிலையை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. "வங்காள தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியானது போராடுகிறது. வங்காளத்தில் பாஜக அதிகபட்ச வெற்றியைப் பெறும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
#WATCH | On his decision to remove Article 370, PM Narendra Modi says, "Article 370 was the agenda of only 4-5 families, it was neither the agenda of the people of Kashmir nor the agenda of the people of the country. For their benefit, they had built such a wall of 370 and used… pic.twitter.com/x9P263Khes
— ANI (@ANI) May 28, 2024
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நல்ல உறவு இருந்தாலும், ஏன் கூட்டணி இல்லை?
அரசியல் ஆதாயத்திற்காக மத்திய புலனாய்வு அமைப்புகளான சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்டவைகளை தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றதே?
பிரதமர் மோடி பதில் அளித்ததாவது, எதிர்க்கட்சித் தலைவர்களைக் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் "குப்பை" என்றும் அந்த குப்பைகளை மறுசுழற்சி" செய்வேன் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
#WATCH | On Calcutta High Court's decision to cancel all OBC certificates issued in West Bengal after 2010, PM Narendra Modi says, "They have a modus operandi. First, they started the sin of giving it to minorities by making a law in Andhra Pradesh, they lost in the Supreme Court… pic.twitter.com/KVhtLD32rO
— ANI (@ANI) May 28, 2024