![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
"வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதில் அரசு உறுதிபூண்டுள்ளது" பிரதமர் மோடி பேச்சு!
நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் உழைக்கும் விவசாய சகோதர சகோதரிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
![PM Modi says all efforts will be made and decisions taken for the welfare of farmers](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/14/309d5dcf894d4db8d5ce0a666c4fe7c01726324022053729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், ஊரக வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
"உணவு உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும்"
வேளாண் வருமானம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சமீபத்திய முடிவுகளை எடுத்துரைத்த மோடி, வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியைக் குறைப்பதாக இருந்தாலும் சரி அல்லது சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, இதுபோன்ற முடிவுகள் நமது உணவு உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார். இந்த முடிவுகள் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது, “நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் உழைக்கும் நமது விவசாய சகோதர சகோதரிகளின் நலனுக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்.
देश की खाद्य सुरक्षा के लिए दिन-रात जुटे रहने वाले अपने किसान भाई-बहनों के हित में हम कोई कोर-कसर नहीं छोड़ रहे हैं। चाहे प्याज का निर्यात शुल्क कम करना हो या खाद्य तेलों का आयात शुल्क बढ़ाना, ऐसे कई फैसलों से हमारे अन्नदाताओं को बहुत लाभ होने वाला है। इनसे जहां उनकी आय बढ़ेगी,… pic.twitter.com/CgOSes5W6R
— Narendra Modi (@narendramodi) September 14, 2024
பிரதமர் மோடி பேசியது என்ன?
வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை குறைப்பதாக இருந்தாலும் சரி, சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பல முடிவுகள் நமது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
வெங்காயத்தின் சில்லரை விற்பனையை கிலோவுக்கு ரூ.35 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய 5 செப்டம்பர் 2024 அன்று மொபைல் வேன்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம், தேசிய கூட்டுறவு நிதியம் மற்றும் தேசிய வேளாண்மை கூட்டுறவு இணையம் ஆகியவற்றின் நடமாடும் ஊர்திகள் மூலமாக டெல்லி மற்றும் மும்பை போன்ற முக்கிய நுகர்வு மையங்களில் தொடங்கப்பட்டு, பின்னர் சென்னை, கொல்கத்தா, பாட்னா, ராஞ்சி, புவனேஸ்வர், குவஹாத்தி போன்ற முக்கிய நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)