PM Modi: நம்பிக்கைன்னா அது மோடி தான்.. மீண்டும் உலகளவில் முதலிடம் பிடித்து அசத்தல் - தலைவன்னா சும்மாவா?
PM Modi: சர்வதேச அளவில் மிகவும் நம்பகமான தலைவராக பிரதமர் மோடி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

PM Modi: மசோதாக்களுக்கு ஒப்புதல் வாங்குவதில் ட்ரம்பை எல்லாம் பின்னுகு தள்ளி, பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரதமர் மோடியின் ஆதிக்கம்:
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ஒருமுறை, சர்வதேச அளவில் மிகவும் நம்பகமான் தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். மார்னிங் கன்சல்ட் குளோபல் லீடர் அப்ரூவல் டிராக்கர் நிறுவனத்தின் ஆய்வின்படி, மோடியின் அரசாங்கத்தை 75% மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.. அதன்படி, அன்படி, அதிகப்படியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவராக சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம், உலகின் மிகவும் பிரபலமான மற்றும் நம்பகமான தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக தனது நிலையை மீண்டும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மோடி குறித்து மக்கள் சொல்வது என்ன?
மார்னிங் கன்சல்ட் என்பது அமெரிக்காவை தளமாகக் கொண்ட வணிக நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு நிறுவனமாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல்வேறு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களுடன் நடத்தும் தினசரி நேர்காணல்களின் அடிப்படையில், உலகத் தலைவர்களின், குறிப்பாக ஜனநாயக நாடுகளின் பொது ஒப்புதல் மதிப்பீடுகளை அளவிடுகிறது.
அதன்படி கடந்த ஜுலை 4ம் தேதி தொடங்கி 10ம் தேதி வரையில் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. , அதன் முடிவில், “நான்கு பேரில் மூன்று பேர் மோடியை ஒரு ஜனநாயகத் தலைவராக நேர்மறையான பார்வை கொண்டுள்ளனர். 18 சதவிகிதம் பேர் எதிரான கருத்தை கொண்டுள்ளனர் . மேலும், வலுவான தலைவராக உணரவில்லை என்றாலும், உறுதியாக தெரியவில்லை அல்லது தெளிவான கருத்து இல்லை என சுமார் 7% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமரான மோடி, கடந்த 2024ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று, தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்புக்கு இப்படிபட்ட நிலையா?
முக்கிய உலகத் தலைவர்களின் ஒப்புதல் மதிப்பீடுகளைக் கண்காணிக்கும் இந்த உலகளாவிய கணக்கெடுப்பின்படி, வெறும் 45 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டை மட்டுமே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்றுள்ளார். கூடுதலாக, உலகின் சக்தி வாய்ந்த தலைவராக தன்னை தொடர்ந்து முன்னிலைப்படுத்தி வரும் ட்ரம்ப், இந்த பட்டியலில் முதல் 5 இடங்களில் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. அவருக்கு 8வது இடம் மட்டுமே கிடைத்துள்ளது. வர்த்தக வரிகள் மற்றும் உள்நாட்டு முடிவுகள் உட்பட அவரது சில கொள்கை நடவடிக்கைகள் அவரது புகழைக் குறைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலக தலைவர்களுக்கு எந்த இடம்?
அதேநேரம், மோடியை தொடர்ந்து தென் கொரியாவின் லீ ஜே-மியுங் 59 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டையும், அர்ஜென்டினாவின் ஜேவியர் மிலே 57 ஒப்புதல் மதிப்பீட்டையும் மற்றும் கனடாவின் மார்க் கார்னி 56 ஒப்புதல் மதிப்பீட்டையும் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் 54 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டைப் பெற்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் கரின் கெல்லர்-சுட்டர் 53 ஒப்புதல் மதிப்பீட்டையும், மெக்சிகோவின் புதிய அதிபரான கிளாடியா ஷீன்பாம் 48 சதவிகித ஒப்புதல் மதிப்பீட்டையும் பெற்றுள்ளார்.




















