(Source: ECI/ABP News/ABP Majha)
PM Modi: வேற லெவல்! புதுப் பொலிவு பெறும் 508 ரயில் நிலையங்கள்... தமிழகத்தில் 18... அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!
நாட்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
PM Modi: நாட்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டினார்.
508 ரயில் நிலையங்கள்:
இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 'அம்ரித் பாரத்’ திட்டம். இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த 508 ரயில்நிலையங்கள் புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற உள்ளது. இதற்கு பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டினார்.
அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி:
#WATCH | Prime Minister Narendra Modi lays the foundation stone to redevelop 508 railway stations across India under Amrit Bharat Station Scheme; says, "Around 1300 major railway stations in India will now be developed as Amrit Bharat Railway Station. They will be re-developed in… pic.twitter.com/CPC67SWUEV
— ANI (@ANI) August 6, 2023
டெல்லியில் இருந்தப்படியே காணொலி மூலம் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.25,000 கோடி செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது. இந்த 508 ரயில் நிலையங்கள் இன்று பணிகள் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின்போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் எத்தனை ரயில் நிலையங்கள்?
இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத், தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திராவில் 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13 ஆகியவை புனரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. அதன்படி, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், ஜோலார்பேட்டை ஆகிய 18 ரயில் நிலையங்கள் ரூ.381 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.
மேலும் படிக்க