மேலும் அறிய

PM Modi: 3 நாட்கள், 59 உயிர்கள், கிடைக்காத ஹெலிகாப்டர், கோத்ரா ரயில் எரிப்பு - பிரதமர் மோடி விளக்கம்

PM Modi Podcast: பிரதமர் மோடி பாட்காஸ்டில் பேசியபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான தனது நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

PM Modi Podcast: பிரதமர் மோடி பாட்காஸ்டில் பேசியபோது கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்த பல விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

பாட்காஸ்டில் பிரதமர் மோடி:

ஜெரோதா (Zerodha) இணை நிறுவனர் நிகில் காமத் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான ’ People by WTF’ பாட்காஸ்ட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அதில்,  அவரது வாழ்க்கை, கல்வி, அரசியல், மன அழுத்தத்தை நிர்வகிப்பது, காந்தியிடம் இருந்த கற்றுக்கொண்டவை உள்ளிட்ட என பல்வேறு விவகாரங்கள் குறித்து உரையாடியுள்ளார். குறிப்பாக பெரும் சர்ச்சையாக கருதப்படும், அவர் முதல்முறையாக எம்.எல்.ஏவான மூன்றே நாட்களில் அரங்கேறிய 59 பேரை காவு வாங்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்தும் பேசியுள்ளார்.

”மூன்றே நாட்கள் தான்” - பிரதமர் மோடி

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக பேசிய பிரதமர் மோடி, “மூன்று நாட்கள் தான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். திடீரென்று கோத்ராவில் நடந்த அந்த பெரிய சம்பவம் எனக்கு தெரிய வந்தது. ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. படிப்படியாக மக்கள் இறந்தது தெரிய வந்தது. நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். கவலை கொண்டிருந்த நிலையில், சட்டசபையில் இருந்து வெளியே வந்தவுடன், நான் கோத்ராவுக்குச் செல்ல விரும்புவதாகச் சொன்னேன். அதற்காக முதலில் வதோத்ராவிற்கு செல்வோம் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோத்ரா செல்வோம் என்றேன். ஆனால், அங்கு ஹெலிகாப்டர் இல்லை என்று அவர்கள் கூறினர். ஆனால், எங்கிருந்தாவது அதை தயார்படுத்துங்கள் என்று கூறினேன். ஒஎன்ஜிசி நிறுவனத்திடம் ஒன்று இருந்தது என்று நினைக்கிறேன்.அது ஒரு சிங்கிள் இன்ஜின் ஹெலிகாப்டர். ஆனால், நாங்கள் விஐபிக்களை அழைத்துச் செல்ல மாட்டோம் என்றனர். ஆனால், நான் விஐபி அல்ல, சாதாரண மனிதன் மட்டுமே வாங்கள் செல்வோம் என்றேன்” என தெரிவித்துள்ளார்.

கலங்கிய பிரதமர் மோடி 

தொடர்ந்து பேசுகையில், “நான் கோத்ராவை அடைந்தேன். இப்போது, ​​அந்த வலிமிகுந்த பார்வையுடன், பல உடல்கள் எரிந்து கிடந்தன. நீங்களே கற்பனை செய்து பாருங்கள். நானும் ஒரு மனிதன், நானும் ஒரு மனிதன் தான், எனக்கும் உணர்ச்சிகள் இருக்குமல்லவா. ஆனால் இந்த பதவியில் இருப்பதால், நான் என் உணர்ச்சிகளில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஒரு மனிதனாக என் இயல்பான போக்கை நான் கையாள்வதற்கு என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன்” என பிரதமர் மோடி கலங்கி பேசினார்.

தேர்தல் முடிவுகள்:

பதற்றம் தொடர்பான கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த மோடி, “2002ல் குஜராத்தில் தேர்தல் நடந்தது. அது என் வாழ்வின் மிகப்பெரிய சவாலாக இருந்தது... நான் டிவி பார்க்கவில்லை, முடிவுகளை பார்க்கவில்லை. காலை 11:00 மணி அல்லது மதியம், முதல்வர் பங்களாவுக்கு வெளியே டிரம்ஸ் அடிக்கும் சத்தம் கேட்டது. மதியம் 12 மணி வரை எனக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லியிருந்தேன். பிறகு எங்கள் ஆபரேட்டர் எனக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் முன்னிலை பெற்றுவிட்டோம் என்று கடிதம் அனுப்பினார். அதனால், அந்த நாளில் எதுவும் என்னைப் பாதிக்கவில்லை என்று நான் நம்பவில்லை, ஆனால் அந்த உணர்வை வெல்லும் எண்ணம் எனக்கு இருந்தது” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
Karthigai Deepam: ரேவதியை நெருங்குவானா கார்த்திக்? சதி செய்யும் சின்ன மாமியார்? அடுத்து நடப்பது என்ன?
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
Honda Car Offers: 2.45 லட்சம் ரூபாய் மெகா தள்ளுபடி..! கார்களுக்கு அதிரடி ஆஃபர் தந்த ஹோண்டா - எந்த காருக்கு எவ்ளோ?
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
Embed widget