Watch Video: மோடிக்கு ஒரு கப் டீ கொடுத்தால் போதும்... மார்பில் மோடி உருவத்துடன் டீ விற்கும் நபர்... வைரலான வீடியோ!
தன் தலையில் இந்திய வரைபடத்தை வண்ணம் தீட்டியபடி அங்கிருந்தோரைக் கவர்ந்த அந்நபர், பிரதமர் மோடிக்கு ஒரு கப் தேநீர் வழங்குவதே தனது நோக்கம் எனத் தெரிவித்தித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதன் நிறைவு விழாவில் பங்கேற்பதற்காகவும், அருங்காட்சியகம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பாட்னாவுக்கு வருகை தந்திருந்தார்.
இந்த விழாவில் மோடியின் உருவத்தை தன் உடலில் வரைந்தபடி தேநீர் விற்ற நபர் ஒருவர் அங்கிருந்த ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
’நமோ சாய்’என தன் உடலில் அங்கங்கே எழுதிவாறும் தன் தலையில் இந்திய வரைபடத்தை வண்ணம் தீட்டியபடியும் அங்கிருந்தோரைக் கவர்ந்து வந்த அந்நபர், பிரதமர் மோடிக்கு ஒரு கப் தேநீர் வழங்குவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்தித்துள்ளார்.
View this post on Instagram
இந்நிலையில், இந்த நபரின் ஃபோட்டோவும் வீடியோக்களும் தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.
மேலும் படிக்க: TN Fisherman : கடும் போராட்டம்.. கடலில் சிக்கிய மீனவர்கள்.. இந்தியக் கடலோரக் காவல்படையினரின் அதிரடி முயற்சி மூலம் மீட்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்