(Source: ECI/ABP News/ABP Majha)
TN Fisherman : கடும் போராட்டம்.. கடலில் சிக்கிய மீனவர்கள்.. இந்தியக் கடலோரக் காவல்படையினரின் அதிரடி முயற்சி மூலம் மீட்பு
இந்தியக் கடலோரக் காவல்படையினர் இரண்டு படகுகளில் சிக்கியிருந்த 16 மீனவர்களை மீட்டனர்.
கடந்த ஜூலை 10-ஆம் தேதி நள்ளிரவு, இந்தியக் கடலோரக் காவல்படையினர் இரண்டு படகுகளில் சிக்கியிருந்த 16 மீனவர்களை மீட்டனர். காக்கிநாடாவில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் உள்ள ONGC எண்ணெய் கிணறு அருகே இயந்திரக் கோளாறு காரணமாக படகுகள் மிதந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், பணியாளர்கள் அனைவரும் கடலோர காவல்படை தடுப்பு படகு மூலம் வெளியேற்றப்பட்டு காக்கிநாடாவில் உள்ள மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடலில் மீனவர்கள் சிக்கி கொள்வதும் அவர்களை கடற்படையினர் காப்பாற்றுவதும் தொடர் கதையாகி வருகிறது. மீனவர்களின் ஒரே வாழ்வாதாரம் மீன்பிடி தொழிலாகவே உள்ளது. அதிலிருந்து வரும் பணத்தை வைத்தே அவர்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
Today @CSG_TN, @tnpoliceoffl Gr1 PC 980 Tr.Ezhil Valavan along with a fishermen Tr.Raja Kannu rescued one person who attempted to commit suicide at Poompuhar sea. ADGP @CSG_TN conveys his commendation to Tr.Ezhil Valavan and Tr.Raja Kannu for their act of exemplary courage. pic.twitter.com/v6bwdaiq9B
— Coastal Security Group (@CSG_TN) February 24, 2022
இச்சூழலில், இயற்கை பேரழிவு காரணமாக மீனவர்கள் கடலில் சிக்கி கொள்வது அவர்களை பெரும் துயரத்திற்கு இட்டு செல்கிறது. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு அவர்கள் கடலில் சிக்கும் பட்சத்தில் அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்பதை அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The @indiannavy @IndiaCoastGuard @IAF_MCC have rescued fishermen from TN & Kerala too. Per the letter from TN Chief Secretary missing TN fishermen is 97. Rescue operations are continuing. Will readily work on any further info you can provide. pic.twitter.com/kMwuT92Q7U
— Nirmala Sitharaman (@nsitharaman) December 2, 2017
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்