Viral : இப்படிப்பட்ட கண்டிஷன்களா? திருமணத்துக்கு காண்ட்ராக்ட் போட்டுக்கொண்ட ஜோடி.. விளாசும் நெட்டிசன்கள்
ஏதேதோ பொருத்தம் பார்க்கிறது குடும்பங்களும், ஜோடிகளும். அப்படி விநோத கண்டிஷன்கள் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு புதுமணத் தம்பதி.
திருமணத்திற்கு மிக முக்கியம் மனப்பொருத்தம்தான். ஆனால் இதைத்தவிர ஏதேதோ பொருத்தம் பார்க்கிறது குடும்பங்களும், ஜோடிகளும். அப்படி விநோத கண்டிஷன்கள் போட்டு நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு புதுமணத் தம்பதி.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மின்டு. இவருக்கும் சாந்தி என்ற பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின் போது வழக்கமான சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் மணமகனும், மணமகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதில் இருந்த நிபந்தனைகள் எல்லாம் விமர்சனத்துக்கு உரியதாகவே இருந்தன. அந்த ஒப்பந்தங்கள் ஒரு பெரிய அலங்கரிக்கப்பட்ட தாளில் எழுதப்பட்டிருந்தது. அதில் மணமகனும், மணமகளும் கையெழுத்திடுகின்றனர். அந்த வீடியோயை அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
கண்டிஷன்கள் என்னென்ன?
அந்த ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் இவைதான். மனைவி தினமும் சேலைதான் கட்ட வேண்டும்.
கணவருடன் மட்டுமே இரவு பார்ட்டிகளுக்கு செல்ல வேண்டும்.
ஞாயிறு காலை உணவை கணவர் செய்ய வேண்டும்.
வீட்டு உணவுக்கு முக்கியத்துவம் கொடுத்த உண்ண வேண்டும்.
மாதத்தில் ஒரு பீட்சாவுக்கு மட்டுமே அனுமதி.
15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங்.
தினமும் ஜிம் செல்ல வேண்டும்.
பார்ட்டிகளில் நல்ல புகைப்படங்கள் எடுக்க வேண்டும்.
View this post on Instagram
இன்னும் இப்படி பல நிபந்தனைகள் இருக்கின்றன. பல மணல்கயிறு ஸ்டைல் நிபந்தனைகள்தான். தினமும் சேலையா இன்னும் ஆணாதிக்கம் இந்தியாவில் குறையவே இல்லை என்று சில ட்விட்டராட்டிகள் திட்டியுள்ளனர். தினமும் ஜிம் தவிர ஒன்றுமே தேறாது என்று இன்னும் சிலர் கூறியுள்ளனர்.
வேறொரு சம்பவத்தில், இணையத்தில் வைரலாகும் இந்த வீடியோவில் தாலி கட்டிய பின்னர் மணப்பெண் காலைத் தொட்டு மணமகன் வணங்குகிறார். இந்த செயலுக்கு நெட்டிசன்கள் நெகிழ்ந்து வாழ்த்துச் சொல்லியுள்ளனர். ஒருசில பழமைவாதிகள் மனைவி காலில் விழுவதா என்று மணமகனை திட்டியும் உள்ளனர்.