டெலிபிராம்டருக்கு ரெஸ்ட் கொடுத்த பிரதமர் மோடி.. சுதந்திர தின உரையின் அவர் ஃபாலோ செய்தது இதுதான்..
இந்த சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார்.
இந்த சுதந்திர தினத்தில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துவிட்டு காகித நோட்டுகளைப் பயன்படுத்தியுள்ளார். செங்கோட்டையிலிருந்து ஒன்பதாவது முறையாக அவர் உரையாற்றியுள்ளார்.
ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் பிரசாரத்தின் கீழ் நாட்டில் கொண்டாடப்படும் சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின்போது மோடி டெலி ப்ராம்ப்டரை தவிர்த்துள்ளார்.
மூவர்ணத்தால் ஆன பாரம்பரிய தலைப்பாகை அணிந்து பேசிய மோடி, சுதந்திரத்திற்காக பங்காற்றிய சுதந்திர போராட்ட வீரர்கள் குறித்து நினைவுகூர்ந்தார். "நமது சுதந்திரப் போராட்டத்தின் போது, நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கொடூரத்தையும் கொடுமையையும் சந்திக்காத ஒரு ஆண்டே இல்லை. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் போது, இந்தியாவுக்கான அவர்களின் தொலைநோக்கு மற்றும் கனவை நாம் நினைவுகூர வேண்டிய நாள் இன்று.
அண்ணல் காந்தி, பகத் சிங், ராஜ்குரு, ராம்பிரசாத் பிஸ்மில், ராணி லக்சுமிபாய், சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் அடித்தளத்தை அசைத்த அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் நம் நாடு நன்றிக்கடன் பட்டுள்ளது. சுதந்திரத்திற்காக போராடியவர்களை மட்டுமல்ல, சுதந்திர இந்தியாவின் சிற்பிகளான ஜவஹர்லால் நேரு, ராம் மனோகர் லோஹியா மற்றும் சர்தார் வல்லபாய் படேல் போன்ற பலரையும் வணங்குகிறோம்.
விவேகானந்தர், அரவிந்தர், ரவீந்திரநாத் தாகூர் போன்ற சிறந்த சிந்தனையாளர்களின் தாயகமாக இந்தியா திகழ்கிறது. ராஜேந்திர பிரசாத், ஜவஹர்லால் நேரு, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, லால் பகதூர் சாஸ்திரி போன்ற நமது ஜாம்பவான்கள் நமது சுதந்திரத்திற்காகப் போராடி நாட்டை வடிவமைத்தனர்.
பிர்சா முண்டா, டிரோத் சிங் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு போன்ற ஆதிவாசி சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் சுதந்திரப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். மங்கள் பாண்டே, தாத்யா தோபே, பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, சந்திரசேகர் ஆசாத், அஷ்பகுல்லா கான், ராம் பிரசாத் பிஸ்மில் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் அடித்தளத்தை அசைத்த நமது எண்ணற்ற புரட்சியாளர்களுக்கு இந்த தேசம் நன்றி கூறுகிறது" என்றார்.
பெண் சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூர்ந்த மோடி, "ராணி லக்சுமிபாய், ஜல்காரி பாய், சென்னம்மா, பேகன் ஹஸ்ரத் மஹா என இந்தியப் பெண்களின் வலிமையை நினைத்துப் பார்க்கும்போது இந்தியா பெருமை கொள்கிறது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்