மேலும் அறிய

PM Modi Chennai: "சென்னை என் மனதை வென்றது" ரோட்ஷோவுக்கு பிறகு பிரதமர் மோடி உருக்கம்!

எழும்பூர் ரயில் நிலையம் உள்பட சென்னையில் உள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி 7வது முறையாக தமிழ்நாடு வருகை தந்தார்.

"சென்னையின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம்"

தனி விமானம் மூலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ஹெச். ராஜா ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக தியாகராய நகர் பனகல் பூங்கா பகுதிக்கு மோடி வருகை தந்தார். அங்கிருந்து பிரமாண்ட வாகன பேரணி மேற்கொண்டார். வாகன பேரணி நிறைவுபெற்றதை தொடர்ந்து, வாகன பேரணி குறித்தும் சென்னை மற்றும் தமிழ் கலாசாரம் குறித்தும் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அதில், "சென்னை என் மனதை வென்றது! இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன. சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

வளர்ச்சி பணிகளை பட்டியலிட்ட பிரதமர் மோடி:

இந்த துடிப்பான நகரத்தின் நலனுக்காக நமது அரசு தொடர்ந்து பாடுபடும் என்று சென்னையைச் சேர்ந்த எனது சகோதரிகள் மற்றும் சகோதரர்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக, 'வாழ்வை எளிதாக்கும்' முக்கிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், திறப்பதற்கும் நான் அடிக்கடி இங்கு வந்துள்ளேன். இதன் அடிநாதமாக இருப்பது இணைப்புகள். சமீபத்தில், சென்னை விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் திறக்கப்பட்டது. வரும் காலங்களில் எழும்பூர் ரயில் நிலையம் உட்பட இங்குள்ள ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
 
சென்னை-கோயம்புத்தூர் மற்றும் சென்னை-மைசூரு இடையேயான இணைப்பு மேம்பட உதவி புரிந்த வந்தே பாரத் விரைவு வண்டிக்கு நன்றி. சென்னையில் பணிபுரியும் தொழில் வல்லுநர்களுக்கு உதவும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் வலைப்பின்னல்கள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை போன்ற முக்கிய சாலைத் திட்டங்கள் மற்றும் தற்போதுள்ள மற்ற சாலைத் திட்டங்களின் விரிவாக்கம் வணிகம் மற்றும் இணைப்பை மேம்படுத்தும்.
 
வீட்டு வசதித் துறையில் குறிப்பிடத்தக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சில காலத்திற்கு முன்பு, இலகுவான வீடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட பல வீடுகள் திறக்கப்பட்டன, இதனால் பல விருப்பங்களுக்கு சிறகுகள் கிடைத்தன. மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் மற்றும் ஐஐடி-மெட்ராஸின் டிஸ்கவரி கேம்பஸ் போன்ற திட்டங்களில் எங்கள் அரசாங்கம் இணைந்து செயல்பட்டு வருகிறது, இது வணிகத்தையும் புதுமை கண்டுபிடிப்புகளையும் அதிகரிக்கும்.

மீண்டும் கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்த பிரதமர்:

தமிழ் கலாச்சாரத்திற்கு நமது அரசு மிகுந்த மரியாதை அளிக்கிறது. ஐ.நா.வில் தமிழில் சில வார்த்தைகள் பேசும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி பெருமிதம் கொண்டேன்! உலக அரங்கில் தமிழ் கலாச்சாரத்தையும் மொழியையும் தொடர்ந்து பிரபலப்படுத்துவோம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் கலாச்சாரத்தின் அம்சங்களை மேலும் பிரபலப்படுத்தும் நோக்கத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதுப்பிக்கப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசை டிடி தமிழ் தொடங்கப்பட்டது, இது இந்த மாநிலத்தின் சிறப்பு மிகு கலாச்சாரத்தைக் கொண்டாடுவதில் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
 
சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.
 
பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.
 
கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GV Prakash Saindhavi Divorce  : ’’கடந்த 24 வருசமா.. ஏத்துக்க முடியல..’’ மனம் திறந்த சைந்தவிSavukku Shankar : மீண்டும் பெண் போலீஸ் பாதுகாப்புசைலன்டாக மாறிய சவுக்கு!தமிழக காவல்துறை சம்பவம் 2.0Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!Mamata banerjee : ”கூட்டணியை விட்டு ஓடுனீங்களே! இப்போ எதுக்கு வர்றீங்க மம்தா?” விளாசும் ஆதிர் ரஞ்சன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
SRH vs GT LIVE Score: ஹைதராபாத்தில் ஆதிக்கம் செலுத்தும் மழை; போட்டி நடக்குமா என்ற ஏக்கத்தில் ரசிகர்கள்!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Ilaiyaraaja: ’மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை’ - ரணகளத்திலும் அமைதியாக இளையராஜா செய்த வேலை!
Sunil Chhetri Retirement:  ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Sunil Chhetri Retirement: ஓய்வை அறிவித்த கால்பந்து வீரர் சுனில் சேத்ரி: விராட் கோலி செய்த செயல்!
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Cauvery Water: ”காவிரியில் 2 TMC நீரை திறக்க வேண்டும்” கர்நாடக அரசுக்கு ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
Breaking News LIVE: ஜாமீன் கோரி யூடியூப்பர் சவுக்கு சங்கர் மனுதாக்கல்
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ?  மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
 ஒரு நாளைக்கு எத்தனை கப் டீ/காபி குடிக்கலாம் ? மருத்துவ ஆலோசகர் சொல்லும் அறிவுரை!
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
4000 பணியாளர்களை வேலையில் இருந்து விடுவிக்கும் தோஷிபா! வெளியான தகவலால் அதிர்ச்சி
Saindhavi: 24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
24 வருடங்கள்; இனியும் அப்படிதான்: முன்னாள் கணவர் ஜிவிக்காக குரல் கொடுத்த சைந்தவி!
Embed widget