மேலும் அறிய

Pink Moon 2022: பிங்க் மூன் என்றால் என்ன? எந்த நேரத்தில் பார்க்கலாம்? முழு விவரம் இங்கே..

ஏப்ரல் 16 இன்று சித்திரை பெளர்ணமி நாள் என்று எல்லோருக்கும் தெரியும். அன்று சந்திரன் வசீகரமாக முழுமையாக இருக்கும் என்பதும் சொல்லித் தெரியவேண்டிய விஷயமில்லை.

ஏப்ரல் 16 இன்று சித்திரை பெளர்ணமி நாள் என்று எல்லோருக்கும் தெரியும். அன்று சந்திரன் வசீகரமாக முழுமையாக இருக்கும் என்பதும் சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை. ஆனால், சூப்பர் மூன் என்பது வழக்கமான நிலவை விட தனிச்சிறப்பானது. சூப்பர் மூன் நாளில் முழு மதி ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். அதன் அளவு வழக்கத்தைவிட மிகமிகப் பெரியதாக இருக்கும் என்பதால் இன்னும் பிரகாசமாக காண்போர் மனதைக் கொள்ளையடிக்கும் வகையில் இருக்கும். அளவில் பெரிதாகவும், நிறத்தில் பிரகாசமாகவும் தெரியும் இந்த பிங்க் மூனை சூப்பர் மூன் என்றும் அழைக்கிறார்கள். இது இந்த ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி சரியாக 12.15 மணிக்கு முழுவீச்சில் ஜொலிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த  ஆண்டு பிங்க் மூன் வார இறுதி நாள் முழுவதுமாக தெரியும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்துக்களின் நாட்காட்டியின் படி, இன்றைய தினம் ஹனுமன் ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது. எனவே ஹனுமன் ஜெயந்தி நாளில் பிங்க் மூன் நிகழ்வு வருவது இந்துக்களால் நல்ல சமிஞையாகப் பார்க்கப்படுகிறது.

பிங்க் மூன் என்றால் என்ன?

பிங்க் மூன் என்பது நாம் நினைப்பது போல் பிங்க் மூன் என்பது பிங்க் நிறத்தில் இருக்காது. மாறாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இந்த வகை நிலவுக்கு அமெரிக்காவின் மாஸ் ப்ளாக்ஸ் என்ற தாவரத்திலிருந்து பெற்றுள்ளது. மூலிகைச் செடியான இது மாஸ் பிங்க் என்றும் அழைக்கப்படுகிறது. பிங்க் மூனுக்கு ஸ்ப்ரவுட்டிங் கிராஸ் மூன், குரோவிங் மூன், ஃபிஷ் மூன் மற்றும் ஹேர் மூன் என்ற பெயர்களும் உள்ளன.

ஏன் சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது?

நிலவு தனது சுற்றுவட்டப் பாதையில் சுற்றும்போது பூமிக்கு சற்றே நெருக்கமாக வரும் அப்போது தான் இந்த சூப்பர் மூன் நிகழ்வு நடைபெறுகிறது. அவ்வாறாக பூமிக்கு அருகில் வரும்போது நம் பார்வைக்குப் பெரியதாகத் தெரிவதால் அது சூப்பர்மூன் என்றழைக்கப்படுகிறது.

இந்தியாவில் இந்த பிங்க் மூன் தெரியுமா?
தெரியும். இந்த ஆண்டு இந்தியாவில் சூப்பர் மூன் தெரியும். மிகவும் பிரகாசமாகத் தெரியும்.

எப்போது, எங்கு இந்த சூப்பர் மூனைப் பார்க்கலாம்?
இந்த சூப்பர்மூன் உலகின் எல்லாப் பகுதிகளிலுமே வெறும் கண்களால் பார்க்கும்படி தெரியும். இதைப் பார்ப்பதற்கு சரியான நேரம் சந்திரன் உதய நேரம். நாசாவின் கணிப்புப்படி ஏப்ரல் 17 அதிகாலை 12.15 மணிக்கு இந்த நிகழ்வைக் காணலாம். அதுவே இதைக் காண சிறந்த நேரம்.

இந்த ஆண்டு சூப்பர் மூனைப் பார்க்க உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget