(Source: ECI/ABP News/ABP Majha)
Amit Shah : வேற்று மாநில மக்கள் இந்தியில் பேச வேண்டும்.. இந்தியை ஏற்றுக்கொள்ளவேண்டும் - அமித்ஷா
மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஒருவரிடம் மற்றொருவர் உரையாடும்போது, ஆங்கிலத்தைத் தவிர்த்து ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய அமித்ஷா, `ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் , ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது `இந்திய மொழியில்' இருக்க வேண்டும். இந்தி மொழியின் முக்கியத்துவத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
Hindi should be accepted as an alternative to English and not to local languages: Amit Shah
— ANI Digital (@ani_digital) April 7, 2022
Read @ANI Story | https://t.co/kNCUpxDiI1#AmitShah #English #Hindi pic.twitter.com/90xPTf8qJ5
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘
”நாட்டின் அலுவல் மொழியாக இந்தியை நடைமுறைப்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி முடிவு செய்துள்ளார். இது இந்தி மொழியில் முக்கியத்துவத்தை அதிகரிக்கும். வேற்று மாநில மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளும்போது பயன்படுத்த வேண்டிய மொழி இந்திதான். ஆங்கிலம் அல்ல. ஒரு மாநிலத்தின் உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக இல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
மேலும் கூறுகையில், ”பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றாத வரையில், அந்த மொழியை மக்களிடம் பரப்ப முடியாது. மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் அடிப்படை அறிவைக் கொடுக்கவேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். இந்தி மொழியாக இருக்க வேண்டும்.’ என்று பேசினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்