(Source: ECI/ABP News/ABP Majha)
Pawan Kalyan Net Worth: அரசியலில் புது இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாண்.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
Pawan Kalyan Net Worth: அரசியலில் புதிய இன்னிங்ஸை தொடங்கிய பவன் கல்யாணின் சொத்து மதிப்பு எவ்வளவு. அவருக்கு சொந்தமாக எவ்வளவு பங்களாக்கள் இருக்கின்றது என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
ஆந்திர அரசியலில் இன்று புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண். கடந்த 2014ஆம் ஆண்டு கட்சியை தொடங்கி அவர் இன்று அமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகை கலக்கி வந்த அவர், இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து மாநில அரசியலின் போக்கை மாற்றியுள்ளார்.
பலன் கல்யாணின் மொத்த சொத்து மதிப்பு: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலிலும் மக்களவை தேர்தலிலும் அவரது கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடியுள்ளது. இது அவரின் அரசியல் வாழ்க்கையில் புது திருப்புமனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது பற்றி தெரிந்து கொள்வோம். கடந்த பல ஆண்டுகளாகவே அவரின் சொத்து மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 136.05 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பலன் கல்யாண் தாக்கல் செய்த வேட்பு மனுவில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு, 52.85 கோடி ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது இரண்டு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு அதிகரிக்கும் அதே சமயத்தில் கடனும் அதிகரித்து வந்துள்ளது.
அவரது மொத்த கடன் 65.76 கோடி ரூபாயாக உள்ளது. அதில் குறிப்பிடத்தகுந்த கடன் தொகை சினிமா துறையை சேர்ந்த தனிநபர்களுக்கும் நிறுவனத்திற்கும் தர வேண்டியுள்ளது.
ஆண்டு வருமானம்: பவன் கல்யாணின் மாத வருமானம் சுமார் 1.5 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அவரது வருமானம் அதிகரித்து கொண்டே செல்கிறது.
முன்பு எல்லாம் ஒரு திரைப்படத்திற்கு 10 முதல் 12 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால், 2021ஆம் ஆண்டு வெளியான 'வக்கீல் சாப்' திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அவரது சம்பளம் 50 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சம்பளத்தை தவிர திரைப்படத்தின் லாபத்திலும் குறிப்பிட்ட தொகை அவருக்கு செல்வதாக கூறப்படுகிறது.
சொகுசு வீடு: ஹைதராபாத்திலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அவருக்கு சொந்தமாக பல பங்களாக்கள் இருக்கின்றன.
- விஜயவாடாவில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு 16 கோடி ரூபாயாகும்.
- ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் உள்ள சொகுசு வீட்டின் மதிப்பு 12 கோடி ரூபாயாகும்.
- தெலங்கானா ரங்கா ரெட்டி மாவட்டத்தில் அவருக்கு சொந்தமாக பிரம்மாண்ட பண்ணை வீடு ஒன்று உள்ளது.
- பஞ்சாரா ஹில்ஸில் ஒரு குடியிருப்பு வளாகம் உள்ளது.
இதை தவிர இந்தியா முழுவதும் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார்.
கார்கள் மற்றும் பைக்குகள்:
- 2.2 கோடி ரூபாய் மதிப்புள்ள Mercedes AMG G63
- 1.1 கோடி ரூபாய் மதிப்புள்ள Jaguar XJ
- 1.3 கோடி ரூபாய் மதிப்புள்ள Mercedes Benz G55 AMG
- 33.7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Ford Endeavor
- 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW 520D
- 67 லட்சம் ரூபாய் மதிப்புள்ள Mercedes Benz R350