இணையதளத்தில் பாஸ்போர்ட் அப்ளை பண்ணப்போறீங்களா? இன்னிலிருந்து 3 நாளுக்கு வாய்ப்பில்ல!
இன்று இரவு 8 மணி முதல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சேவை இணையதளம் இன்று (அக்டோபர் 4ஆம் தேதி) இரவு 8 மணி முதல் 7 அக்டோபர் காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் இன்று இரவு 8 மணி முதல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது.
பாஸ்போர்ட் சேவை இணையதளம்:
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது. எனவே, சந்தேகங்களுக்கு, பராமரிப்புப் பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த தகவலை பாஸ்போர்ட் விண்ணப்பித்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு அனுப்பி தகவலை தெரிவியுங்கள். இதே போன்று, தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் காரணமாக கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி முதல் செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) வரை பாஸ்போர்ட் சேவை இணையதளம் இயங்கவில்லை.
Advisory 📢 - Passport Seva portal will be unavailable from 20.00 hrs (04.10.2024) till 06.00 hrs (07.10.2024) due to technical maintenance.@drkjsrini @passportsevamea pic.twitter.com/fPEpwUGxUb
— RPO Madurai (@rpomadurai) October 4, 2024
வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்களாகும். பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். விசா உங்கள் வருகையின் நோக்கம் மற்றும் கால அளவைக் குறிக்கிறது. இந்த ஆவணங்கள் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்கின்றன.
இதையும் படிக்க: ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?