இந்திய-பாக்., எல்லையில் பிறந்த குழந்தை: ‛பார்டர்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!
பாலம் ராம் கூறுகையில்,குழந்தை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிறந்ததால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருக்கும் ராஜன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நிம்பு பாய் - பாலம் ராம் தம்பதி. நிம்பு பாய் கர்ப்பமாக இருந்தார். இவர்கள் 97 பாகிஸ்தான் குடிமக்களுடன் கடந்த 71 நாட்களாக அட்டாரி எல்லையில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில் நிம்பு பாய்க்கு கடந்த இரண்டாம் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக கிராமங்களில் இருந்த சில பெண்கள் அவருக்கு பிரசவம் பார்த்தனர். அப்போது நிம்பு பாய்க்கு ஆண் குழந்தை பிறந்தான். அந்தக் குழந்தைக்கு பார்டர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாலம் ராம் கூறுகையில்,தனது குழந்தை இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பிறந்ததால் பார்டர் என்ற இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றார்.
மேலும், தங்கள் உறவினர்களைச் சந்திப்பதற்காகவும், யாத்திரைக்காகவும் இந்தியா வந்த 98 குடிமக்களுடன், தேவையான ஆவணங்கள் இல்லாததால் வீடு திரும்ப முடியவில்லை என்று பாலம் ராம் தெரிவித்தார்.
மக்களில் 47 குழந்தைகள் உள்ளனர், அவர்களில் ஆறு பேர் இந்தியாவில் பிறந்தவர்கள் ஆவர். அவர்கள் ஒரு வயதுக்குட்பட்டவர்கள். பாலம் ராமைத் தவிர, அதே கூடாரத்தில் வசிக்கும் மற்றொரு பாகிஸ்தான் குடிமகன், லக்யா ராம், 2020இல் ஜோத்பூரில் பிறந்ததால், தனது மகனுக்கு 'பாரத்' என்று பெயரிட்டார்.
தற்போது அட்டாரி எல்லையில் இருக்கும் பாகிஸ்தானியர்களில் மோகன் மற்றும் சுந்தர் தாஸ் என்பவர்களும் அடங்குவர். இந்தக் குடும்பங்கள் அட்டாரி சர்வதேச சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்களுக்கு மூன்று வேளை உணவு, மருந்து, உடைகளை அப்பகுதி மக்கள் வழங்கிவருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: நடிகர் ஜாக்குலினுக்கு பரிசளிக்கப்பட்ட 50 லட்சம் மதிப்புள்ள குதிரை, 9 லட்ச மதிப்புள்ள பூனை.. வெளியான தகவல்
தம்பியின் திருமண விருந்து.. ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்த உணவைப் பகிர்ந்த பெண்.. வைரல் புகைப்படம்
ஓமிக்ரான் வைரஸ் தயார்நிலை : 100 படுக்கைகளுடன் புதுச்சேரியில் ஓமிக்ரான் சிறப்பு வார்டு அமைப்பு..
தமிழ்நாட்டில் தொடங்கிய முன் பனிகாலம்: மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்!