உச்ச நீதிமன்றத்தில் இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கிறதா? மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
10,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தீர்வுக்காகக் காத்திருக்கின்றன என மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் 10,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக தீர்வுக்காகக் காத்திருக்கின்றன என மத்திய அரசு மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
More than 71,000 cases are pending with the Supreme Court, out of which more than 10,000 are awaiting disposal for over a decade, #RajyaSabha was informed on August 4.https://t.co/N7XcCZCPoD
— The Hindu (@the_hindu) August 4, 2022
எழுத்துப்பூர்வ பதிலில், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ஆகஸ்ட் 2 ஆம் தேதி நிலவரப்படி 71,411 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதில் 56,000 சிவில் வழக்குகள் மற்றும் 15,000 க்கும் மேற்பட்ட குற்றவியல் வழக்குகள் அடங்கும்.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 71,411 வழக்குகளில் 10,491 வழக்குகள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 42,000 வழக்குகள் ஐந்து ஆண்டுகளாகவும் 18,134 வழக்குகள் ஐந்து முதல் 10 ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்திலும் நிலுவையில் உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ரிஜிஜு, "2016 ஆம் ஆண்டில் பல்வேறு உயர் நீதிமன்றங்களில் 40,28,591 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி வரை அவற்றின் எண்ணிக்கை 59,55,907 ஆக உயர்ந்துள்ளது. இது 50 சதவீதம் அதிகரித்துள்ளது. மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 2016 முதல் இந்த ஆண்டு ஜூலை 29 வரை நிலுவையில் உள்ள வழக்குகள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன.
The #SupremeCourt has over 71 thousand cases pending, from which over 10,000 are awaiting disposal for the last decade, according to the Rajya Sabha on Thursday.https://t.co/vKiqs8MV0L
— Economic Times (@EconomicTimes) August 4, 2022
2016 ஆம் ஆண்டில், 2.82 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. இந்த எண்ணிக்கை 4.24 கோடியாக உள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்ப்பது நீதித்துறையின் எல்லைக்குள் உள்ளது.
வெவ்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்வதும், தீர்ப்பதும் தொடர் நடவடிக்கையாக இருந்தாலும், அந்தந்த நீதிமன்றங்களால் பல்வேறு வகையான வழக்குகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்