மேலும் அறிய

கொரோனா கோரப் பிடியில் மகாராஷ்ட்ரா : 18 நாட்களில் ஒரு மில்லியன் பாதிப்பு

மகாராஷ்ட்ரா மாநிலத்தின் கடந்த 18 நாட்களில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவலின் இரண்டாம் அலை தாக்கம் அதிகளவில் பரவி வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்ட்ரா மாநிலத்தில்தான் கொரோனா பரவலின் தாக்கம் அதிகமாக  உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதலில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்திய அம்மாநில அரசு, கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால் தற்போது 15 நாள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

மகாராஷ்ட்ராவில் நேற்று ஒரு நாள் மட்டும் 68 ஆயிரத்து 631 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் தலைநகரான மும்பையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 8 ஆயிரத்து 468 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் மகாராஷ்ட்ராவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


கொரோனா கோரப் பிடியில் மகாராஷ்ட்ரா : 18 நாட்களில் ஒரு மில்லியன் பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 503 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மும்பையில் மட்டும் 53 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால். உயிரிழப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் உயிரிழப்பு விகதம் 1.58 சதவீதமாகவும், மும்பையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2.18 சதவீதமாகவும் உள்ளது.

மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை தற்போது வரை 38 லட்சத்து 39 ஆயிரத்து 338 நபர்களாக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 6 லட்சத்து 70 ஆயிரத்து 388 நபர்களும், மும்பையில் மட்டும் 86 ஆயிரத்து 688 நபர்களும் சிகிச்சையில் உள்ளனர்.


கொரோனா கோரப் பிடியில் மகாராஷ்ட்ரா : 18 நாட்களில் ஒரு மில்லியன் பாதிப்பு

மாநிலம் முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 31 லட்சத்து 6 ஆயிரத்து 828 ஆக உள்ளது. வீட்டிலே தனிமைப்படுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 36 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக உள்ளது.  

 மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை, 10 லட்சத்திற்கும்( ஒரு மில்லியன்) அதிகமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் 5.93 லட்சம் நபர்களுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டதே, இதுவரை ஒரு மாதத்தில் அதிகபட்ச பாதிப்பாக அந்த மாநிலத்தில் இருந்தது. ஆனால், தற்போது 18 நாட்களிலே அந்த மாநிலத்தில் 1 மில்லியன் நபர்களுக்கு  கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது, மகாராஷ்ட்ரா மட்டுமின்றி நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தொழில் நகரமாக மும்பை இருப்பதால் தற்போது அங்கு நிலவி வரும் பாதிப்பு பல்வேறு பாதிப்புகளை தேசிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் உள்ளிட்ட பொருளாதார இழப்பு குறியீடுகள் காலையிலிருந்தே துவங்கிவிட்டன. 

இதே நிலை தொடர்ந்தால் மும்பையின் தீவிர ஊரடங்கு போடும் சூழல் ஏற்படலாம். அவ்வாறு முழு ஊரடங்கு போடப்படும் நிலையில் மும்பையை மையமாக வைத்து இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடையும். ஏற்கனவே ஊரடங்கால் அங்குள்ள தொழிற்சாலைகள் கடும் பாதிப்பை சந்தித்த நிலையில், தற்போது அங்கு அதிகரித்து வரும் கொரோனா தொற்று முதலீட்டாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
பண்டிகை காலம்.. வியாபாரிகளுக்கு நெருக்கடி கூடாது.. போலீசாருக்கு மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..
ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறீர்களா? புதிய அபராத விதியை தெரிந்துகொள்ளுங்கள்!..

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget