மேலும் அறிய

2ஆவது இன்னிங்ஸ்! அரசியலில் அடித்து ஆடும் ஒலிம்பிக் நாயகன் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்!

மத்திய அமைச்சராக இருந்த ரத்தோர் மாநில அமைச்சராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் டூ மாநில அமைச்சர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சர்வதேச அளவில் துப்பாக்கிச்சூட்டில் 25க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றவர். கடந்த 2004ஆம் ஆண்டு, ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று சாதனை படைத்தவர். ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி வந்த ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கடந்த 2014ஆம் ஆண்டு அரசியலில் குதித்தார்.

பாஜக சார்பாக ஜெய்ப்பூர் ரூரல் மக்களவை தொகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வெற்றிபெற்றார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சராகவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்தார். மத்தியில் அரசியல் செய்து வந்த இவரை, மாநில அரசியலுக்கு அனுப்பியது பாஜக மேலிடம்.

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பலரை மாநில தேர்தலில் போட்டியிட வைத்தது பாஜக தலைமை. அதன்படி, நடந்து முடிந்த ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் ஜோத்வாரா தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற போதிலும், பல நாட்களாக முதலமைச்சரை அறிவிப்பதில் தொடர் இழுபறி நீடித்தது.

இச்சூழலில், யாரும் எதிர்பாராத விதமாக முதல்முறை எம்எல்ஏ-வான பஜன்லால் சர்மா, முதலமைச்சராக அறிவித்தது பாஜக. அவருடன் தியா குமாரியும், பிரேம் சந்த் பைரவாவும் துணை முதலமைச்சரா பதவியேற்றனர். இருப்பினும், அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.

இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஒலிம்பிக் நாயகன்:

தேர்தல் முடிவுகள் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் நிறைவுபெற உள்ள நிலையில், இன்று 22 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். அதில், ராஜ்யவர்தன் சிங் ரத்தோருக்கு கேபினட் அந்தஸ்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சராக இருந்த ரத்தோர், மாநில அமைச்சராக தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

ரத்தோரை தவிர கிரோரி லால் மீனா, மதன் திலாவர், கஜேந்திர சிங் கிம்சர், பாபுலால் காரடி, ஜோகரம் படேல், சுரேஷ் சிங் ராவத், அவினாஷ் கெலாட், ஜோரராம் குமாவத், ஹேமந்த் மீனா, கன்ஹையா லால் சௌத்ரி, சுமித் கோதாரா உள்ளிட்டவர்கள் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

சஞ்சய் சர்மா, கௌதம் குமார், ஜபர் சிங் கர்ரா, சுரேந்திர பால் சிங், ஹிராலால் நகர் உள்ளிட்டவர்களுக்கு தனிப்பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மஞ்சு பாக்மர், விஜய் சிங் சவுத்ரி, கே.கே.பிஷ்னோய், ஜவஹர் சிங் பேடன், ஓதாரம் தேவசி ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.

இதையும் படிக்க: "இந்துக்களுக்கு மட்டுமே பகவான் ராமர் சொந்தமில்லை" ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget