Odisha Train Accident :ஒடிசா ரயில் விபத்து... விஜய், சூர்யா, ரஜினியை விளாசும் ரசிகர்கள்... இதுதான் காரணமா?
முன்னனி நடிகர்களான நடிகர் ரஜினிகாந்த் , விஜய், சூர்யா உள்ளிட்டோர் ஏன் ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தியாவையே நேற்று மாலை முதல் உலுக்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தி என்றால் அது ஒடிசா ரயில் விபத்து தான். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ் முன்னனி நடிகர்கள் பலரும் இந்த சம்பவம் குறித்து இரங்கல் தெரிவிக்காதது ஏன் என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரயில் விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 280-ஐ கடந்துள்ள நிலையில், 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒடிஷா ரயில் விபத்து குறித்து, நடிகர் கமல் ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து, நடிகை பிரியா ஆனந்த், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், நடிகர் ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் சல்மான்கான், சிரஞ்சீவி உள்ளிட்ட பல பிரபலங்கள் மனவேதனையுடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
இரும்புப் பெட்டிகளைப் போலவே
— வைரமுத்து (@Vairamuthu) June 3, 2023
இடிபாடுகளுக்குள் சிக்கி
இதயக்கூடும் நொறுங்கிவிட்டது
பாதிக்கப்பட்ட
ஒவ்வொரு குடும்பத்திற்கும்
ஆழ்ந்த இரங்கல்
மீட்புப் பணியாளர்க்குத்
தலைதாழ்ந்த வணக்கம்
இருந்த இடத்தில்
எழுந்து நின்று மௌனமாய் அஞ்சலிக்கிறேன்
கண்ணீர்
கன்னம் தாண்டுகிறது#TrainAccident
Disheartened to hear about the #TrainAccident in Odisha. My heartfelt condolences and prayers to the families who have lost their loved ones
— G.V.Prakash Kumar (@gvprakash) June 3, 2023
Utterly shocked at the tragic Coromandel express accident in Orissa and the huge loss of lives! My heart goes out to the bereaved families.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023
I understand there is an urgent demand for blood units to save lives. Appeal to all our fans and good samaritans in the nearby areas to…
இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் குறித்து பதிவிட்டிருந்த ரஜினிகாந்த், அரசியலுக்கு வர உள்ளதாக கூறப்படும் நடிகர் விஜய், சமூக சிந்தனை கொண்டவரான நடிகர் சூர்யா, நடிகர் அஜித் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவிக்காதது ஏன் என இணையவாசிகள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
மேலும் படிக்க