‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார்.

FOLLOW US: 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக நேற்று மட்டும் இந்தியாவில் மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2,17,353 ஆக இருந்தது. அத்துடன் நேற்று ஒரே நாளில்  கொரோனா தொற்று காரணமாக  1,185 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மகாராஷ்டிரா,கேரளா, உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. 

இந்தியாவின் மொத்த தொற்று பாதிப்பில் சுமார் 67.16 சதவிகிதம் பாதிப்பு இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. எனவே மத்திய மாநில அரசு நோய் தொற்று பரவலை தடுக்க தீவிர முயற்சிகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் பல மாநிலங்கள் தங்களின் தேவைக்காக ஆக்சிஜன் மற்றும் ரெம்டேசிவிர் ஆகியவற்றை மத்திய அரசிடம் கேட்டு வருகின்றன. ‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே இந்த விவகாரம் குறித்து பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளார். எனினும் பிரதமர் மோடி தற்போது மேற்கு வங்கத்தில் இருப்பதால் அவர் டெல்லி வந்த பிறகு தொடர்பு கொள்ளுமாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் உத்தவ் தாக்கரேயின் இந்த குற்றச்சாட்டு குறித்து பிரதமர் அலுவலகம் இன்னும் பதில் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‘பிரதமர் மோடியை தொடர்பு கொள்ள முடியவில்லை’- மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் குற்றச்சாட்டு

முன்னதாக நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான மக்களின் சந்தேகங்களை தீர்க்க மத்திய மாநில அரசுகள் உதவி தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி மத்திய அரசின் உதவி எண்கள் 1075 மற்றும் 91-11-23978046. தமிழ்நாடு அரசு சார்பில் மக்களுக்கு உதவ 044-29510500 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்களை தொடர்பு கொண்டு கொரோனா தொற்று தொடர்பான கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளலாம். 
Tags: Corona Virus Maharastra Uddhav thackrey pm modi Remdesivir Oxygen supply

தொடர்புடைய செய்திகள்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் இன்று 11805 நபர்களுக்கு புதியதாக கொரோனா

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

கொரோனா தடுப்பூசி அலர்ஜியால் முதல் மரணம் - அறிவித்தது மத்திய அரசின் குழு..!

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

MOHFW on Vaccine doses: இந்தியாவில் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக்கொண்டவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, ஜூன் 21 வரை நீட்டிப்பு..!

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

Hajj 2021 Cancelled: இந்தியர்களின் ஹஜ் புனிதப்பயண விண்ணப்பங்கள் ரத்து - ஹஜ் கமிட்டி குழு அறிவிப்பு

டாப் நியூஸ்

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Madhan update : ஆபாச யூ ட்யூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

Arappor Iyakkam : கொரோனா மரணங்களின் உண்மை எண்ணிக்கை இதுதான்! - பகீர் கிளப்பும் அறப்போர் இயக்க அறிக்கை..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அழுகிய நிலையில் கொரோனா நோயாளியின் சடலம் : கொலை செய்யப்பட்டது அம்பலம்..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’ சசிகலாவின் அடுத்த ஆடியோ..!

Sasikala 44th Audio : 'ஒ.பன்னீர்செல்வத்தை முதல்வர் ஆக்கியிருப்பேன்’  சசிகலாவின் அடுத்த ஆடியோ..!