மேலும் அறிய

INDIA Bloc: முடிந்ததா I.N.D.I.A. கூட்டணி? காங்கிரசுக்கு சீட் இல்லை, மே.வங்கத்தில் தனித்து போட்டி - மம்தா பானர்ஜி

INDIA Bloc: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் I.N.D.I.A. கூட்டணியில் இருந்தாலும், மேற்குவங்கத்தில் தனித்தே போட்டியிடுவோம் என முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார்.

INDIA Bloc: நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிடும் மம்தா பானர்ஜியின் முடிவு, I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மேற்குவங்கத்தில் தனித்து போட்டி- மம்தா பானர்ஜி:

மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டியிட உள்ளதாக, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் காங்கிரஸ் கட்சியுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மேற்குவங்கத்தில் தனித்து போராடுவோம் என்று நான் எப்போதும் கூறி வருகிறேன். நாட்டில் என்ன நடக்கும் என்பது பற்றி எனக்கு கவலை இல்லை, ஆனால் நாங்கள் மதச்சார்பற்ற கட்சி மற்றும் மேற்குவங்கத்தில் இருக்கிறோம்.  நாங்கள் தனியாகவே பாஜகவை தோற்கடிப்போம். நாங்கள் இந்திய கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கிறோம். ராகுல் காந்தியின் நியாய யாத்திரை எங்கள் மாநிலம் வழியாக செல்கிறது, ஆனால் அது குறித்து எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

I.N.D.I.A. கூட்டணியில் சிக்கல்:

மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பின் மூலம், எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A. கூட்டணியில் அங்கம் வகித்தாலும், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க அவர் விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே, கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார், கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்வது என்பது போன்ற பிரச்னைகள், பல்வேறு மாநிலங்களில் நிலவி வருகிறது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை முன்னிற்கு மேற்கொண்ட, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடாகவே, கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கியபோதும் கூட, அதனை ஏற்க மறுத்தார். மேற்குவங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க முடியாது எனவும், காங்கிரசுக்கு சொற்ப தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கூறி வந்தது. இந்நிலையில், மேற்குவங்கத்தில் கூட்டணி கட்சிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில், தொகுதிகளை ஒதுக்க முடியாது என மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்த முடிவு, பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் கட்டமைக்கப்பட்டுள்ள I.N.D.I.A. கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டணி தொடருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
பில்டப் ப்ரமோஷன்களாலே ப்ளாப்! பிரம்மாண்ட பட்ஜெட் படங்களுக்கு வில்லன் - இது தேவையா கோபி?
Embed widget