NITI Aayog: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படுகிறதா? - நிதி ஆயோக் சொல்வது என்ன?
NITI Aayog: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற செய்திக்கு நிதி ஆயோக் மறுப்பு தெரிவித்துள்ளது.
NITI Aayog: பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற செய்திக்கு நிதி ஆயோக் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள PIB குறிப்பிட்டுள்ளதாவது: ”பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் வெளியிட்டிருப்பதாக ஓர் போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இது போன்ற எந்த ஒரு பட்டியலையும் நிதி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும் பொதுத்துறை வங்கிகள் எனப்படும். அதேபோல், இந்திய அரசால் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளும் பொதுத்துறை வங்கிகள் எனப்படும். அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, மகாராஷ்டிர வங்கி, பாரதிய மகிளா வங்கி,கனரா வங்கி,இந்திய மத்திய வங்கி, கார்ப்பரேஷன் வங்கி,- தேனா வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பஞ்சாப் & சிந்து வங்கி, பஞ்சாப் தேசிய வங்கி, பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி,ஐதராபாத் ஸ்டேட் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, இந்திய யூனியன் வங்கி, இந்திய ஐக்கிய வங்கி, விஜயா வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் பொதுத்துறை வங்கிகள் எனப்படும்.
பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்ற ஊடக செய்திக்கு நித்தி ஆயோக் மறுப்புhttps://t.co/TfJ8tyM3wE@PMOIndia @nsitharaman @mppchaudhary @DrBhagwatKarad @FinMinIndia @NITIAayog @PIB_India pic.twitter.com/KnHIscxupr
— PIB in Tamil Nadu (@pibchennai) January 6, 2023
இவற்றில் ஒரு சில குறிப்பிட்ட வங்கிகளை தனியார் மயம் ஆக்கவுள்ளதாக அண்மைக் காலங்களில் செய்தி வெளியாகியது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் PIBயிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. அதில், பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து நிதி ஆயோக் வெளியிட்டிருப்பதாக ஓர் போலியான பட்டியல் ஊடகங்களில் பரவி வருகிறது. இது போன்ற எந்த ஒரு பட்டியலையும் நிதி ஆயோக் எந்த வடிவத்திலும் வெளியிடவில்லை என்பது தெளிவுபடுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.