பட்ஜெட் ட்ரிப் டூ கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கக்கூடிய கொடைக்கானல், மேற்கு தொடர்ச்சி மலையின் மிக முக்கிய சுற்றுலாத்தலமாக இருந்து வருகிறது.
கொடைக்கானல் ஏரியிலிருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ள மிகச் சிறிய கிராமம். பூம்பாறை. முருகன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேகங்கள் தொட்டுச் செல்லும் காட்சிகளை ரம்யமாக பூம்பாறையிலிருந்து பார்க்க முடியும்.
கொடைக்கானலில் அட்வென்சர் விரும்புபவர்களுக்கு மிக ஏற்ற இடமாக டால்பின் நோஸ் இருக்கிறது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரடும் முரடான பாதையில் மலையேறிச் செல்ல வேண்டும். அட்வென்சர் பயணம்..
பெரிஜம் ஏரி - பைன் மரங்களால் சூழப்பட்ட ஏரி பார்ப்பதற்கு ரம்மியாக இருக்கும் கொடைக்கானலில் தவறவிட கூடாத இடங்களில் இதுவும் ஒன்று.
கொடைக்கானலில் பிரமிப்பை உண்டாக்கக்கூடிய இடங்களில் ராக் பில்லரும் ஒன்று. இந்த பாறை பார்ப்பதற்கு இரண்டு தூண்களைப் போல் மலையின் முடிவு பகுதிகளில் அமைந்திருப்பது மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும்.
கொடைக்கானலில் உள்ள நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம். பியர் ஷோலா நீர்வீழ்ச்சி, பாம்பார் நீர்வீழ்ச்சி, வெள்ளி அருவி, தேவதை (ஃபேரி) நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி ஆகிய நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசிக்கலாம்.
கொடைக்கானலில் காடுகளுக்குள் மலையேற்றம் செய்ய ஏற்ற இடமாக குக்கல் குகை உள்ளது. செங்குத்தான பாறைகள் மற்றும் பாயும் புல்வெளிகள் வழியாக மலையின், உச்சிக்கு செல்லும் குறுகிய பயணம் மலையேறுபவர்களுக்கு, சிறந்த அனுபவத்தை தருகிறது.
குணா குகை என்று அழைக்கக்கூடிய டெவில் கிச்சன் கண்டிப்பாக பார்க்கக்கூடிய இடமாக உள்ளது. தற்போது மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு பிறகு இந்த இடத்திற்கு தனி அந்தஸ்து கிடைத்துள்ள
கொடைக்கானலில் பல்வேறு அருங்காட்சியங்கள் உள்ளன. செண்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியம், மெழுகு அருங்காட்சியகம் ஆகியவற்றை விருப்பம் இருப்பவர்கள் சென்று பார்வையிடலாம்.