Kasaragod: கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து - 154 பக்தர்கள் காயம், 10 பேர் கவலைக்கிடம் - கேரளாவில் அதிர்ச்சி
kasaragod: கேரளாவில் கோயில் திருவிழாவில் நடந்த பயங்கர தீ விபத்தில் 150 பேர் காயமடைந்துள்ளனர்.
kasaragod: கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் வீரர்காவு காளியாட்டத்தின் போது, பட்டாசு சேமிப்பு தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 154 பேர் காயமடைந்தனர். 10 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். காயமடைந்தவர்களில் 97 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் இம்பாசேகர் தெரிவித்துள்ளார். திருவிழாவின்போது வெடித்த பட்டாசில் இருந்து சிதறிய தீப்பொறி பட்டாசு கிடங்கில் விழுந்ததில், இந்த விபத்து நேர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
during the Nileshwaram Veerarkavu Kaliyattam in Kasaragod, an explosion at a fireworks storage site left 154 people injured, with 8 in critical condition. District Collector Imbashekhar reported that 97 of the injured are undergoing treatment.#explosion #Kerala #fireworks pic.twitter.com/EkxeerWihr
— Sreelakshmi Soman (@Sree_soman) October 29, 2024
திருவிழாவில் நடந்தது என்ன?
அஞ்சுதம்பலம் வீரராகவர் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி இல்லை என காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் காளிமுகம் தெரிவித்தார். பட்டாசு வெடிக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் ஏதும் செய்யவில்லை எனவும், அனுமதி இன்றி பட்டாசு வெடிக்க ஏற்பாடு செய்த திருவிழா அமைப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.
திங்கள்கிழமை இரவு 12 மணியளவில் அஞ்சுதம்பலத்தில் உள்ள வீரராகவர் கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து தீப்பிடித்து 100க்கும் மேற்பட்டோர் உடல் தீக்காயமடைந்தனர். மூவாளம்குழி சாமுண்டி தேயரின் வெள்ளாட்டம் புறப்படும்போது பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த கட்டிடத்தில் தீப்பொறி விழுந்து மொத்தமாக வெடித்தது. கோயில் சுவரை ஒட்டிய தாள் வேயப்பட்ட கட்டிடத்தில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகே, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தேயத்தை காண கூடியிருந்தனர். அப்போது நடந்த விபத்தில் அருகில் இருந்த ஏராளமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.