அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல்.... ஒரு இரவு வாடகை இத்தனை லட்சங்களா?
அமெரிக்க சென்றுள்ள பிரதமர் மோடி தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒரு அறையில் ஒரு இரவு தங்க அதிகபட்சமாக ரூ.12.15 லட்சம் வரையில் வாடகை பெறப்படுகிறது.
அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நியூயார்க்கில் உள்ள லோட்டே நியூயார்க் பேலசில் தங்கி உள்ளார். சென்ட்ரல் பூங்காவில் இருந்து 10லிருந்து 12 நிமிடங்கள் தொலைவில் இந்த 5 நட்சத்திர விடுதி உள்ளது. கடந்த 2019 மற்றும் 2014 ஆம் ஆண்டு நியூயார் சென்ற மோடி இதே ஹோட்டலில் தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹோட்டலில் மொத்தம் 733 விருந்தினர் அறைகள் உள்ளன. இந்த நியூயார்க் நகரின் புகழ்பெற்ற ஹோட்டலில் தங்குவதற்கு கிங் சைஸ் மெத்தையுள்ள அறைக்கு, ஒரு இரவுக்கு 48 ஆயிரம் ரூபாயிலிருந்து வாடகை தொடங்குகிறது. இந்த ஹோட்டலில் மிகவும் சொகுசு வசதிகளை கொண்ட உயர்தர அறையில் தங்குவதற்கு ஒரு இரவுக்கு ரூ. 12.15 லட்சம் வரையில் வாடகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அந்நாட்டின் முதல் பெண்மனி ஜில் பைடனின் அழைப்பை ஏற்று இன்று முதல் வரும் 24ஆம் தேதி வரை 4 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். நாளை பிரதமர் மோடி அங்கு நடைபெறும் அரசு விருந்தில் கலந்து கொள்கிறார்.
சர்வதேச யோகா தினத்தை வருடந்தோறும் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஒன்பது ஆண்டுகளுக்கு முன் ஐநா பொதுச்சபை மேடையில் கோரி இருந்தார். இந்நிலையில் ஐநா தலைமையகத்தில் நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சிக்கு மோடி தலைமைதாங்க உள்ளார்.
முன்னதாக, நேற்று நியூயார்க் சென்ற பிரதமர் மோடி, "நியூயார்க் நகரில் வந்துவிட்டேன். இங்கு நடக்கவிருக்கும் தலைவர்களுடனான உரையாடல் மற்றும் ஜூன் 21 ஆம் தேதி நடக்க உள்ள யோகா தின நிகழ்ச்சிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்" என்று ட்வீட் செய்திருந்தார்.
இன்று, முதல்கட்டமாக நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார வல்லுநர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள், தொழில்முனைவோர்,சுகாதாரத் துறை வல்லுநர்கள் உள்ளிட்ட 24 பேருடன் பிரதமர் சந்திப்பு நடத்துகிறார். இந்த பட்டியலில், இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், வானியற்பியல் விஞ்ஞானி நீல் டி கிராஸ் டைசன் மற்றும் கிராமி விருது பெற்ற இந்திய-அமெரிக்க பாடகர் ஃபாலு கணிதப் புள்ளியியல் நிபுணர் நிக்கோலஸ் நாசிம் தலேப், அமெரிக்க கோடீஸ்வர முதலீட்டாளர் ரே டாலியோ, உள்ளிட்டோர் முக்கியமானவர்கள் அடங்குவர்.
மேலும் படிக்க
Senthil Balaji Surgery: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 மணிநேரமாக நீடித்த இதய அறுவை சிகிச்சை நிறைவு