Criminal Law Bills: மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களவையில் கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களவையில் கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இது தொடர்பான, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய நியாயா சன்ஹிதா 2023 மற்றும் பாரதிய சாக்சியா 2023 ஆகிய மூன்று மசோதாகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 11 -ஆம் தேதி மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார். இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் மற்றும் இந்திய சான்று சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக இந்த பெயர் மாற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இந்த மசோதாவை திரும்பப்பெற்றார்.
ஆனால் அதன் பின்னர் அதே மசோதாவை கடந்த 20ஆம் தேதி அறிமுகம் செய்து நிறைவேற்றப்பட்டது. அதாவதுஇந்திய தண்டனை சட்டம், 1860க்கு பதில் பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்திய ஆதார சட்டம், 1872க்கு பதில் பாரதிய சாக்சியா (இரண்டாவது) என்ற பெயரிலும் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1898க்கு பதில் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா என்ற பெயரிலும் புதிய சட்டம் கொண்டு வர மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்த 100 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு புதிய குற்ற சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதா குறித்து தெரிவித்தார்.
புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
புதிய சட்டத்தின்படி, கும்பல் வன்முறையில் ஈடுபட்டது நிரூபணமானால் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கப்படும். இதுகுறித்து மக்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கும்பல் வன்முறை என்பது அருவருப்பான குற்றம். எனவே, கும்பல் வன்முறைக்கு மரண தண்டனை வழங்க புதிய சட்டத்தில் சட்டப்பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய சட்டத்தின்படி, விசாரணை அறிக்கையை 24 மணி நேரத்திற்குள் மாஜிஸ்திரேட்டிடம் சமர்ப்பிக்க வேண்டும். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது. விசாரணை இன்னும் நிலுவையில் இருந்தாலும், நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
45 நாள்களுக்கு மேல் தீர்ப்பை நீதிபதியால் ஒத்திவைக்க முடியாது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்படும் குற்ற வழக்குகளில் தடயவியல் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.