டெல்லியில் மதுபானத்துக்கு தள்ளுபடி! கடத்தலில் முந்தி நிற்கும் மதுபாட்டில்கள்!
தலைநகர் டெல்லியில் மதுபானத்துக்கு அதிகத் தள்ளுபடி வழங்கப்படுகிறது
நடப்பு நிதியாண்டில் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு மதுபானம் கடத்தியதற்காக கிட்டத்தட்ட 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனெனில் தேசிய தலைநகர் டெல்லியில் மதுபானத்துக்கு அதிக தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இங்கே எளிதில் மதுபானம் வாங்க முடிகிறது என்று கலால் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
புள்ளிவிவரப்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி 10,000 லிட்டர் மதுபானங்களை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, 20க்கும் மேற்பட்ட வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார்களை பறிமுதல் செய்துள்ளனர்.
கௌதம் புத் நகரின் கலால் அதிகாரி ராகேஷ் பகதூர் சிங் கூறுகையில், புதிய கலால் கொள்கையின் கீழ் மதுபானங்களின் விலை பாதியாக குறைந்துள்ளதால், டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு நொய்டா வழியாக மதுபானம் கொண்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெல்லியின் புதிய கலால் கொள்கை நவம்பர், 2021ல் அமல்படுத்தப்பட்டது. "இந்த நடவடிக்கை உத்தரபிரதேசத்தின் ஒட்டுமொத்த வருவாயைக் குறைக்கிறது மற்றும் மாநிலத்தின் கருவூலத்திற்கு இழப்பை ஏற்படுத்துகிறது" என்று சிங் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் கூறினார்.
நொய்டாவின் செக்டார் 14A, அசோக் நகர், கோண்ட்லி, ஜந்துபுரா மற்றும் கலிந்தி குஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள மாநில எல்லைகள் வழியாக டெல்லியில் இருந்து உத்திரப் பிரதேசத்துக்கு மதுபானம் கடத்தியபோது ஏப்ரல் 1 முதல் ஜூன் 7 வரை மட்டும் 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலகட்டத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் நாட்டில் தயாரிக்கப்பட்ட பிராண்டுகள் உட்பட 10,056 லிட்டர் ஆல்கஹால் கைப்பற்றப்பட்டது. மேலும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் உட்பட 23 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரி கூறினார்.
"இந்த 68 பேரில், 62 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர், மீதமுள்ள ஆறு பேர் விடுவிக்கப்பட்டனர்," என்று சிங் கூறினார், மாநிலங்களுக்கு இடையேயான கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் உத்திரப்பிரதேசக் கலால் துறை மிகத் தெளிவாக உள்ளது.
ஒருபுறம் டெல்லியையும் மறுபுறம் ஹரியானாவையும் எல்லையாகக் கொண்ட கௌதம் புத் நகரின் கலால் அதிகாரி, உத்திரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்துபவர்களைக் கைது செய்து பறிமுதல் செய்வதில் ஒரு உச்சம் தெரிவதாகத் தெரிவித்துள்ளார்..
2021-2022 நிதியாண்டில் மட்டும் மாவட்ட கலால் துறையினர் 173 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர், இந்த ஆண்டு இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 70 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு உத்திரப்பிரதேசத்தின் எல்லையில் 27,000 லிட்டருக்கும் அதிகமான சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டது மற்றும் 28 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று சிங் கூறினார்.
தொடர்ச்சியான ஆய்வுகளின் விளைவாக, நொய்டா-டெல்லி எல்லையில் உள்ள உத்திரப் பிரதேசத்தில் உள்ள சுமார் நான்கு டஜன் மதுபானக் கடைகள் வருவாயில் வளர்ச்சியைக் கண்டுள்ளன என்று கலால் அதிகாரி கூறினார்.
"டெல்லியில் மதுபானங்களின் விலை குறைக்கப்பட்டதில் இருந்து இந்த கடைகள் வருவாயில் 40 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளன, ஆனால் மதுக்கடத்தல் மீதான ஒடுக்குமுறையை அடுத்து தற்போது வருவாய் 5 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது" என்று சிங் கூறினார்.