National Press Day | தேசிய பத்திரிகையாளர் தினம் 2021: வரலாறு, முக்கியத்துவம் என்ன? என்ன தெரியவேண்டும்?
இந்திய பத்திரிகை கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாளான நவம்பர் 16 (இன்று) தேசிய பதிரிக்க்கையாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாள் நவம்பர் 16. உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு தனித்துவமான நிறுவனமாகும். இது சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான கடமையில் அதிகாரம் செலுத்தும் அமைப்பு ஆகும். பத்திரிகைத் துறையில் தொழில்முறை நெறிமுறைகளைப் பேணுவதற்கான சட்டரீதியான அதிகாரம் கொண்ட நோக்கத்திற்காக இந்திய பத்திரிகை கவுன்சில் 16 நவம்பர் 1966 நிறுவப்பட்டது.
1997 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 16 தேசிய பத்திரிக்கை தினத்தை பத்திரிக்கை கவுன்சில் ஏற்பாடு செய்துள்ளது. இந்தியா விடுதலை பெற்றபின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கும் விடிவுகாலம் பிறந்தது எனலாம். அதன்பின் உருவான இந்திய அரசியலமைப்பு சட்டம், மக்களாட்சியில் எழுத்துரிமையையும் பேச்சுரிமையையும் அடிப்படை உரிமைகளாக அறிவித்தது. அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிடுவது மட்டுமின்றி, மக்களின் பிரச்னைகளை அரசிற்கும் சமூகத்திற்கும் வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு சேர்ப்பதிலும், நாட்டில் நிலவும் குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள் போன்றவற்றை பிரதிபலிக்கும் கண்ணாடியாகவும் ‘இன்வெஸ்டிகேஷன் ஜெர்னலிசம்’ விளங்குகிறது.
இந்திய பிரஸ் கவுன்சில் என்பது 1966 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சட்டரீதியான, தீர்ப்பளிக்கும் அமைப்பாகும். இது 1978 ஆம் ஆண்டின் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தின் கீழ் செயல்படும் பத்திரிகைகளின் சுய கட்டுப்பாட்டு கண்காணிப்புக் குழுவாகும். சபைக்கு ஒரு தலைவர் இருக்கிறார் – பாரம்பரியமாக, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் இந்தியாவில் செயல்படும் செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்கள் மற்றும் பிற ஊடகங்களால் பரிந்துரைக்கப்பட்ட 28 கூடுதல் உறுப்பினர்கள் ஊடக உறுப்பினர்களாக உள்ளனர். 28 உறுப்பினர் குழுவில், 5 பேர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபை (மக்களவை) மற்றும் மேல் சபை (மாநிலங்களவை) உறுப்பினர்களாக உள்ளனர், மேலும் மூன்று பேர் இலக்கிய மற்றும் சட்டத் துறையை சாகித்ய அகாடமி, பல்கலைக்கழக மானிய ஆணையம் மற்றும் இந்திய பார் கவுன்சில் ஆகியவற்றின் வேட்பாளர்களாக பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர். ஊடக சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நாளாக தேசிய பத்திரிகையாளர் தினம் வருடம்தோறும் நவம்பர் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாள், ஜனநாயகத்தைக் கட்டிக்காப்பதில் முக்கிய பங்காற்றும் ஊடகம் மற்றும் தொலைக்காட்சியின் பணிகளை கவுரவிக்கும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது.
தேசிய பத்திரிக்கை தினம் 2021-இல் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் ஆகியவற்றில் பகிர்வதற்கான குவோட்கள்:
"நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் சார்ந்துள்ளது, அது உள்ளவரை நம்மை மட்டுப்படுத்த முடியாது" - தாமஸ் ஜெபர்சன்
"பத்திரிகை சுதந்திரம் என்பது ஜனநாயகத்திற்கு அவசியமானது மட்டுமல்ல, அதுதான் ஜனநாயகமே" - வால்டர் குரோன்கைட்
"உண்மையையும் பொய்யையும் தனது மக்கள் தீர்மானிக்க வெளிப்படையாக இருக்க பயப்படும் ஒரு தேசம் அதன் மக்களைப் பார்த்து பயப்படும் தேசம்" - ஜான் எஃப். கென்னடி
"பத்திரிக்கை சுதந்திரம் என்பது எந்த நாடும் கைவிட முடியாத ஒரு விலைமதிப்பற்ற பாக்கியம்" - மகாத்மா காந்தி
"பத்திரிக்கையை சொந்தமாக வைத்திருப்பவர்களுக்கே பத்திரிகை சுதந்திரம் உத்தரவாதம்" - ஏ. ஜே. லிப்லிங்
"சுதந்திரமான பத்திரிகை என்பது ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று" - நெல்சன் மண்டேலா
"பத்திரிகை சுதந்திரமானது மட்டும் அல்ல, சக்தி வாய்ந்ததும் கூட. அந்த சக்தி நம்முடையது. மனிதன் அனுபவிக்கக்கூடிய பெருமை அது" - பெஞ்சமின் டிஸ்ரேலி