மேலும் அறிய

National Bird Day | ஜனவரி 5 - பறவைகள் தினம்: அழிவின் விளிம்பில் உள்ள டாப் 5 பறவைகள் எவை தெரியுமா?

இன்று ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் அழிந்துவரும் பறவை இனங்கள் பற்றித் தெரிந்துகொள்வோம்.

இன்று ஜனவரி 5 ஆம் தேதி தேசிய பறவைகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதன்மையாக இது அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சூழலை விரும்பும் அனைவரும் நினைவுகூற வேண்டிய நாள் இது. இந்த நாள் அழிந்துவரும் பறவை இனங்கள் பற்றித் தெரிந்து கொள்வோம்.

இயற்கை ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், பறவை காணலில் ஈடுபடுவோர் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 5 ஆம் தேதிய தேசிய பறவைகள் தினமாகக் கடைப்பிடிக்கின்றனர். 1984ல் பென்சில்வேனிய மாகாணத்தைச் சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் சார்லஸ் அல்மான்ஸோ பாபோக் என்பவர் பறவைகளைக் கொண்டாட விடுமுறை அறிவித்தானர். அதிலிருந்தே தேசிய பறவைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் பறவைகளின் வசிப்பிடத்துக்கே சென்று பறவைகள் காணுதலையும், பறவைகள் காணுதலுக்கு மக்களை அழைத்துச் செல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பறவை கணக்கிடும் பணி ஜனவரி 5ல் நடைபெறுவதாலேயே இந்த நாள் தேர்வு செய்யப்பட்டது. இந்த நாளில் நாம் அரிய வகைப் பறவைகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

1. ஸ்ட்ரெஸ்மேன்ஸ் பிரிஸில்ப்ரன்ட் (Stresemann's Bristlefront) 
இது தான் உலகிலேயே அரிய வகைப் பறவையாகக் கருதப்படுகிறது. இது பிரேசில் நாட்டில் மட்டுமே காணப்படுகிறது. 2018 ஆம் கடைசியாக ஒரே ஒரு பறவை மட்டுமே கண்டறியப்பட்டது. அதுவும் இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

2. ககபோ (Kakapo- Flightless Parrot)
இது நியூசிலாந்து நாட்டில் மட்டுமே இருக்கும் கிளிவகை பறவை. இந்தப் பறவையால் பறக்க இயலாது. இதனை ஆந்தைக் கிளி எனவும் அழைப்பர். காரணாம் அதன் பெரிய தலை, இரவு நேரத்தில் இயங்கும் தன்மை. கிளியைப் போல் மரக்கிளைகளில் அல்லாமல் இவை தரைகளில் வாழும். இதுவும் அரிய வகை அழியும் பறவையினங்களில் ஒன்றாகும்.

3. இம்பீரியல் அமேசான் (Imperial Amazon )
இம்பீரியல் அமேசான் அல்லது டொமினிகன் அமேசான் எனும் பறவை கரீபியன் தீவு பகுதியில் மட்டுமே வாழ்கிறது. இதனை சிசேரோ அனுவும் அழைக்கின்றனர். 2019-ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 50 பறவைகள் மட்டுமே இருந்தன.

4. ஃபாரஸ்ட் அவ்லட் (Forest Owlet)
ஃபாரஸ்ட் அவ்லட் எனப்படும் ஆந்தை வகை 2018லேயே அழியப்போகும் அரிய வகை பறவையாக அறிவிக்கப்பட்டது. இந்த வகை ஆந்தை இனம் அழிவிற்கு மரங்கள் அழிப்பே காரணமாகக் கூறப்படுகிறது. இந்த வகை ஆந்தை மத்திய இந்தியாவில் அதிகமாக இருக்கும்.

5. (Great Indian Bustard) கிரேட் இந்தியன் பஸ்டார்ட்:
கானமயில், (Ardeotis nigriceps) இந்தியா, பாக்கிஸ்தானுக்கு உட்பட்ட உலர்ந்த புல்வெளி, வறண்ட புதர்க் காடுகளை வாழ்விடமாகக் கொண்ட பறவையாகும். இப்பறவை, வாழ்விட சீரழிவால் அற்றுப்போகும் நிலையின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய கணிப்பின்படி 500க்கும் குறைவான கானமயில்களே உள்ளன. இப்பறவை ராஜஸ்தான் மாநிலப்பறவையாகும்.

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப உலகில் அத்தனை அத்தனை பறவைகள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அழிப்பதில் மனிதர்களின் செயல்பாடுகள் தனிரகம்.

Also Read | TN Lockdown Update: சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு?? அதிகரிக்கும் கொரோனாவால் தீவிர ஆலோசனையில் முதல்வர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget