Nagaland: நாகாலாந்தில் எதிர்க்கட்சிகளே இல்லாமல் ஆட்சி... என்ன நடக்கிறது?
நாகாலாந்து சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற என்டிபிபி - பாஜக கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும்,நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவன் மூலம் எதிர்க்கட்சியற்ற அரசாங்கம் அமைய இருக்கிறது.
நாகாலாந்து சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற என்டிபிபி - பாஜக கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும்,நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதன் மூலம் எதிர்க்கட்சியற்ற அரசாங்கம் அமைய இருக்கிறது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது.மார்ச் 2 ஆம் தேதி எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் 60 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் என்.டி.பி.பி என அழைக்கப்படும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி 25 இடங்களில் வெற்றிபெற்றது. அதன் கூட்டணியான பாஜக கட்சியும் 12 இடங்களில் வெற்றிபெற்றது.
தேசிய காங்கிரஸ் ஏழு இடங்களிலும், நாகாலாந்து மக்கள் கட்சி 5 இடங்களிலும், ராம் விலாஸ், நாகா மக்கள் முன்னணி மற்றும் இந்திய குடியரசுக் கட்சி தலா 2 இடங்களிலும், ஜனதா தளம் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் பல அரசியல் கட்சிகள் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை.
கூட்டணி ஆட்சி:
என்டிபிபி - பாஜக கூட்டணி நாகாலாந்தில் கூட்டாக 37 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதையடுத்து, நாகாலாந்தில் முதலமைச்சர் நைபியூ ரியோ தலைமையிலான என்டிபிபி கட்சி ஆட்சி அமைக்க இருக்கிறது. இதன் காரணமாக ஆளும் என்டிபிபி கட்சி மீண்டும் ஆட்சியை தனதாக்கியது. நைபியூ ரியோ 5 முறையாக முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார்.
என்டிபிபி- பாஜக கூட்டணிக்கு கிட்டத்தட்ட அங்குள்ள அனைத்து கட்சிகளும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.மேலும், ராம் விலாஸ், இந்திய குடியரசுக் கட்சி(அத்வாலே), ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கடிதம் மூலம் தங்களது ஆதரவையும் ஏற்கனவே தெரிவித்தனர். அதேபோல், நாகாலாந்தில் மூன்றாவது பெரிய கட்சியான தேசிவாத காங்கிரஸும் பாஜக கூட்டணிக்கு தங்களது ஆதரவை தெரிவித்தது.
அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க இருப்பதால் நாகாலாந்த்தில் மீண்டும் ஒருமுறை எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமைய இருக்கிறது. கடந்த 2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் இல்லாத ஆட்சி நடைபெற்றது. ஆனால் சபை பதவியேற்பதற்கு முன்பே எதிர்க்கட்சிகள் இல்லாத முதல் சட்டசபை இதுவாக பதிவானது.
திரிபுரா:
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில், எதிர்கட்சிகளாக இருந்த காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கூட்டணி ஒன்றாக இணைந்து சமீபத்திய தேர்தலில் போட்டியிட்டது. இருப்பினும், திரிபுராவில் பாஜக கூட்டணிதான் 32 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. இங்கு, சிபிஎம் கூட்டணி 14 இடங்களிலும், திமோக 13 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
மேகாலயா:
மொத்தம் உள்ள 60 இடங்களில் 26 இடங்களில் வெற்றி பெற்று மேகாலாயாவில் தேமக முதலிடம் வகித்தாலும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. திரிணாமூல் காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வெற்றிபெற்றன.