(Source: ECI/ABP News/ABP Majha)
Mumbai School: என்ன ட்ரெஸ் வேணும்னாலும் போட்டுட்டு வாங்க.. உங்க விருப்பம்தான்.. தனியார் பள்ளி அதிரடி அறிவிப்பு..!
மும்பையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் தங்களது விருப்பம் போல சீருடைகளை அணிந்து வரலாம் என்று அறிவித்துள்ளது.
மும்பையில் உள்ள தனியார் பள்ளி ஒன்று பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் தங்களது விருப்பம் போல சீருடைகளை அணிந்து வரலாம் என்று அறிவித்துள்ளது.
இந்தியா உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளி நிர்வாகம் பரிந்துரைக்கும் சீருடையை மட்டுமே அணியவேண்டும் விதிமுறையாக உள்ளது. அதன் படி பள்ளிகளுக்கு ஏற்ப மாணவ மாணவியர் சீருடைகளை அணிந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் மும்பையை சேர்ந்த தனியார் பள்ளி ஒன்று தங்களது பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர் அவர்களது விருப்பம் போல ஸ்கர்ட், பேண்ட், ஷார்ட்ஸ் என எந்தவகையான ஆடையை வேண்டுமானாலும் அணிந்து வரலாம் என அறிவித்து உள்ளது.
காரணம் என்ன
மாணவ மாணவியர்கள் மத்தியில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. பள்ளி நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்களையும் பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
பள்ளியின் முதல்வர் பேட்டி
இது குறித்து பள்ளியின் முதல்வர் ராதிகா சின்ஹா கூறுகையில், “சமாதானம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதற்காகவே இந்த முன்னெடுப்பு. இது பாலின உடைகள் பற்றிய ஒரே மாதிரியான பார்வையை உடைக்கிறது” என்று கூறினார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இமெயிலில், சீருடைகளில் பாலின வேறுபாட்டை குறைப்பதன் மூலம், வெவ்வேறு பாலினங்களில் இருக்கும் மாணவர்கள், பாலினத்தை பற்றி கேள்வி கேட்போர் பள்ளியில் தங்களை பாதுகாப்பாக வெளிகாட்டி கொள்ள முடியும் என்று பள்ளி நம்புவதாக குறிப்பிட்டுள்ளது.