ஹெல்மெட் இல்லாமல் பைக் ஸ்டெண்ட் செய்த இளைஞர்கள்; கடுப்பான போலீஸ்- வைரல் வீடியோ
சாலையில் ஹெல்மெட் அணியாமல் இரு இளைஞர் செய்த பைக் ஸ்டெண்ட் வீடியோவை காவல்துறையினர் விழிப்புணர்விற்காக பதிவிட்டது வைரலாகி வருகிறது.
மக்களுக்கு எப்போதும் விழிப்புணர்வு ஏற்படுத்த பல முன்னெடுப்புகளை எடுப்பதில் மும்பை காவல்துறை தான் முதலிடம். அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் இதுபோன்ற விழிப்புணர்வு வீடியோக்களை அவர்கள் தொடர்ந்து பதிவேற்றி வருகின்றனர். அந்த வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் அது பலரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வகையில் தற்போது சாலை பாதுகாப்பு தொடர்பாக மும்பை காவல்துறை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி தற்போது இரு இளைஞர் செய்த தவறை சுட்டிக்காட்டும் வகையில் அவர்கள் சாலையில் ஹெல்மெட் அணியாமல் வேகமாக ஸ்டெண்ட் செய்த வீடியோ ஒன்றை மும்பை காவல்துறை பதிவிட்டுள்ளது. அந்தப் பதிவில் 1997ஆம் ஆண்டு வெளியான பார்பி கேர்ள் என்ற பாடலின் வரியை மாற்றி சாலை பாதுகாப்பிற்கு ஏற்றவாறு பதிவிட்டுள்ளது. அதன்படி, "இது உண்மையான உலகம் என்பதை பார்பி கேர்ள் கவனத்தில் கொள்ள வேண்டும். இது ஒன்று பிளாஸ்டிக் வாழ்க்கை அல்ல. இதில் நமது பாதுகாப்பு மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சரியாக எடுங்கள். வாழ்க்கை உங்களுடைய ஒரு படைப்பு" எனப் பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram
இந்த வீடியோவில் வரும் இரு இளைஞர்களையும் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்கள் மீது இந்திய தண்டை சட்டத்தின் பிரிவு 279 மற்றும் மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. அத்துடன் அவர்கள் இருவரின் ஓட்டுநர் உரிமைத்தையும் தற்போது ரத்தும் செய்துள்ளது. இந்தப் பதிவை மற்றவர்களின் கவனத்திற்கு மும்பை காவல்துறை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 2.9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். அத்துடன் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இருவர் தவறு செய்த வீடியோவை வைத்து விழிப்புணர்வு வாசகத்தை கையில் எடுத்துள்ள மும்பை காவல்துறையை சிலர் பாராட்டியும் வருகின்றனர்.
மேலும் படிக்க:சிறுமி மெயிலுக்கு பிரதமர் இப்படி ஒரு பதில் கொடுத்தாரா? வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?