மேலும் அறிய

Mukhtar Ansari Dies: உத்தரபிரதேசத்தை ஆட்டுவித்த முக்தார் அன்சாரி உயிரிழப்பு - யார் இவர்? வரலாறு சொல்வது என்ன?

Mukhtar Ansari Dies: கேங்க்ஸ்டர் ஆக இருந்து பின்பு அரசியல்வாதியாக மாறிய, முக்தார் அன்சாரி மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mukhtar Ansari Dies: முக்தார் அன்சாரி கடந்த 2005ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

முக்தார் அன்சாரி உயிரிழப்பு:

கேங்ஸ்டர் ஆக இருந்து அரசியல்வாதியாக மாறிய முக்தார் அன்சாரி, நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார். சிறையில் இருந்தபோது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் பண்டா மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்தார் அன்சாரி யார்?

60 வயதான அன்சாரி, மௌ சதார் தொகுதியில் இருந்து ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினர் பதவியை வகித்துள்ளார். 60க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்ட அவர் 2022 செப்டம்பர் முதல் 8 வழக்குகளில் உத்தரபிரதேச நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டுள்ளார். இதனிடையே, கடந்த இருப்பினும் கடந்த 2005ம் ஆண்டு முதல் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாபில் சிறையில் இருந்தார். 

அன்சாரி மீதான வழக்குகள்

கடந்த ஆண்டு உத்தரபிரதேச காவல்துறை வெளியிட்ட 66 பிரபல கேங்ஸ்டர்களின் பட்டியலில் அன்சாரியின் பெயர் இடம்பெற்றுள்ளது. தனது வாழ்நாள் முழுவதும் அவர் பூர்வாஞ்சலில் மட்டுமின்றி, உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் பயங்கரவாத செய்லபாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆயுதக் கலவரங்கள், குற்றச் சதி, மிரட்டல், சொத்து மோசடி, பொது விவகாரங்களில் தலையிடுதல் மற்றும் வேண்டுமென்றே தீங்கு விளைவிக்கும் செயல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. 1988 ஆம் ஆண்டு நிலத்தகராறு காரணமாக சச்சிதானந்த ராய் கொலை வழக்கில் காஜிபூர் மாவட்டத்தில் அவரது பெயர் முதன்முறையகா பேசுபொருளானது. 

அரசியல் பயணம்:

அன்சாரி காசி இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் இறங்கினார், பின்னர் 1996ம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் மவு தொகுதியில் போட்டியிட்டு, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆனார். அதன்பிறகு, தொடர்ந்து 5 முறை எம்.எல்.ஏ., பதவியை தக்கவைத்துக் கொண்டார். 1996ம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாதி கட்சி, 2002 மற்றும் 2007ல் சுயேச்சையாகவும்,  2012ல் தனது சொந்தக் கட்சியான குவாமி ஏக்தா தளத்தின் வாயிலாகவும், 2017ல் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் தனது கட்சியை இணைத்தும் தனது எம்.எல்.ஏ., பதவியை தக்கவைத்துக் கொண்டார்.

முக்தார் அன்சாரி சொத்துக்கள்

கடந்த 2017ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, அன்சாரி தன்னைச் சார்ந்தவர்களின் பெயரில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்தார்.. கூடுதலாக, அவர் மீது 16 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக அறிவித்தார்.  இருப்பினும், முக்தார் அன்சாரியை கைது செய்த பிறகு ரூ.586 கோடி மதிப்பிலான சொத்துகளை போலீசார் பறிமுதல் செய்து, ரூ.2100 கோடிக்கு மதிப்பிலான சட்டவிரோத வணிகங்களை மூடியுள்ளனர். முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்தின் கீழ், மாநிலத்தின் முக்கிய கேங்ஸ்டர் ஆக இருந்த முக்தார் அன்சாரியின் செல்வாக்கு கடுமையாக சரிந்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TNPSC: மொத்தமா போச்சா..! தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி, ஷாக்கான தேர்வாளர்கள் - வெடித்த பிரச்னை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
Embed widget