மேலும் அறிய

Rahul Gandhi Bungalow: "ஒட்டு மொத்த இந்தியாவும் என்னோட வீடுதான்" - திருப்பி கொடுக்கப்பட்ட டெல்லி பங்களா.. உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி 

நான்கு மாத சட்ட போராட்டத்திற்கு பிறகு, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.

ஒட்டு மொத்த இந்தியாவும் தனக்கு வீடுதான் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்.பியுமான ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

கடந்த 2019ஆம் ஆண்டு, கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, "எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?" என கேள்வி எழுப்பியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

ராகுல் காந்தி வழக்கு:

இதனால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, மக்களவை உறுப்பினராக அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால், எம்பிக்கு வழங்கப்படும் பங்களாவில் இருந்து வெளியேறும்படி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன் படி, டெல்லி துக்ளக் சாலையில் உள்ள பழைய பங்களாவை அவர் கடந்த ஏப்ரல் மாதம் காலி செய்தார். அந்த அரசு பங்களாவில்தான், கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ராகுல் காந்தி வசித்து வருகிறார். பங்களாவில் இருந்து வெளியேறியபோது பேசிய ராகுல் காந்தி, "உண்மையைப் பேசியதற்காக இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மக்களால் எனக்கு வழங்கப்பட்ட பங்களா அபகரிக்கப்பட்டதால் இனி அந்த வீட்டில் வாழ விரும்பவில்லை" என கூறினார்.

மீண்டும் ஒதுக்கப்பட்ட டெல்லி பங்களா:

இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் மனுவை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில்  ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவையும் குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இறுதியாக, ராகுல் காந்தி தரப்பு, உச்ச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு, "ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் நல்ல ரசனையில் இல்லை. பொது வாழ்வில் இருப்பவர், மக்கள் முன்பு பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என தெரிவித்தது.

நான்கு மாத சட்ட போராடத்திற்கு பிறகு, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதை தொடர்ந்து, அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில், அவரின் டெல்லி பங்களா மீண்டும் அவருக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள ராகுல் காந்தி, "முழு இந்தியாவும் எனக்கு வீடுதான்" என தெரிவித்துள்ளார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Watch Video: தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
விஜய் போட்டோவை மிதித்த தவெகவினர் களேபரமான பொதுக்கூட்டம் பாதியிலேயே கிளம்பிய புஸ்ஸி | Bussy Anand | Vijay | TN Politics
Operation Sindoor தாக்குதல் ரவுண்டு கட்டும் எதிர்க்கட்சிகள் வாய் திறப்பாரா மோடி?
Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Tech., Giants: இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
இந்திய பொறியாளர்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; கூகுள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களிடம் கூறியது என்ன.?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
12th Supplementary Exam Result: வெளியான பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
திமுக பிரமுகர் படுகொலை: கோவில் கணக்கா? தொழில் போட்டியா? பரபரப்பு விசாரணை! 8 பேர் கைது
Watch Video: தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
தீவிரமடையும் மோதல்; மாறி மாறி பயங்கரமாக தாக்கிக்கொள்ளும் தாய்லாந்து - கம்போடியா - 16 பேர் பலி
ADMK EPS: “திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
“திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும், உண்மைக்காக உரிமைக்காக“-அதிமுகவின் புதிய பிரசார திட்டம்
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
Aadi Pooram 2025 Date: ஆடிப்பூரம் எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? இத்தனை சிறப்புகளா!
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
“கடைக்கு வாடகை கேட்கிறீயா?” போட்றா வீட்ல குண்ட.. கறிக்கடைக்காரரின் அதிர்ச்சி செயல்
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனுக்கு லவ் லெட்டர் எழுதிய ரேவதி.. கடைசியிலே இப்படி போச்சே - கார்த்திகை தீபத்தில் இன்று
Embed widget