மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதோ சுடச்சுட... தமிழ்நாடு முதல் தரணி வரையில் நடந்தது என்ன? காலை 7 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- ஒரு நாள் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறந்து வைக்க குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுத்தார்.
- ஜூன் 5ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
- மணல் கொள்ளையை தடுத்ததால் சேலம் அருகே கிராம நிர்வாக அலுவலரை கொல்ல முயற்சி, காவல் நிலையத்தில் தஞ்சம்
- சூடானில் நடக்கும் உள்நாட்டு போரினால் மீட்கப்பட்டவர்களில் 9 பேர் தமிழ்நாடு வருகை
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்தார்
- கோடநாடு கொலை கொள்ளை வழக்கை விசாரிக்கும் நீதிபதி முருகன் இடமாற்றம்
- விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கிய வழக்கில் பல்வீர் சிங் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 4 வாரங்களில் டி.ஜி.பி. பதில் அளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
- கொரோனாவிற்குப் பிறகு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது - அமைச்சர் மா. சுப்பிரமணியன்
- 6 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு, 1 முதல் 5 வகுப்பு வரை ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ்
இந்தியா:
- வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்கிறவர்கள் மீது தாமாக நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
- பாலியல் குற்றச்சாட்டில் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூசண் மீது இரண்டு வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு
- இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்து 533 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- கர்நாடக தேர்தலில் காங்கிரஸ்க்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள கமலுக்கு ராகுல் அழைப்பு
- கர்நாடக தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் மீது கல்வீசி தாக்குதல்
- தி கேரளா ஸ்டோரி என்ற படத்துக்கு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்
உலகம்
- சூடானில் உள்ள அமெரிக்கர்கள் 48 மணி நேரத்தில் வெளியேறுங்கள் - வெள்ளை மாளிகை
- 12 நண்பர்களை கொலை செய்த தாய்லாந்து பெண் காவல்துறையால் கைது
- தீபாவளி பண்டிகையை பொது விடுமுறையாக அறிவித்தது பென்சில்வேனியா மாகாணம்.
- அமெரிக்காவில் ராணுவப் பயிற்சியின் போது விமானங்கள் நேருக்கு நேர் மோதல்
விளையாட்டு
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ அணி பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
- ஐபிஎல் வரலாற்றில் 257 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த இரண்டாவது அணி என்ற பெருமை பெற்றது லக்னோ அணி
- ஐ.பி.எல். தொடரில் இன்று கொல்கத்தா - குஜராத், டெல்லி - சன்ரைசர்ஸ் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
சென்னை
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion