மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அடடே.. ஒரே நாள்ல இவ்வளவு விஷயம் நடந்திருக்கா? காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தனியார் நிறுவனங்களில் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதா நிறைவேற்றம் - காங்கிரஸ்,மதிமுக, இடதுசாரி கட்சிகளின் எதிர்ப்பு
- தனியார் நிறுவனங்களில் 12 மணி நேர வேலை என்பது கட்டாயமல்ல என அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கணேசன் விளக்கம் - தொழிலாளர் விருப்பத்தின் பெயரிலேயே நடைமுறைப்படுத்தப்படும் என கருத்து
- 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக மாற்றும் மசோதாவை திரும்ப பெறச் சொல்லி ஏஐடியுசி தொழிற்சங்கத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டம்
- சிறுபான்மை மக்களின் அரணாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது - இஸ்லாமியர்களுக்கு ரமலான் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் காப்பாற்ற மாட்டோம் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி
- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் தடுமாற்றம் என முதலமைச்சர் கேள்வி - குற்றவாளி யார் என சிபிசிஐடி விசாரணையில் தெரிய வரும் என திட்டவட்டம்
- காவல்துறை மானியக்கோரிக்கை மீதான முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்த அதிமுக - எதிர்க்கட்சி தலைவரின் உரையை நேரலை செய்யாதது கண்டித்து வெளிநடப்பு
- அதிமுக கொடியை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு எதிர்ப்பு - கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் கூறவில்லை என பன்னீர்செல்வம் விளக்கம்
- சென்னை ஐஐடியில் வடமாநில மாணவர் தூக்கிட்டு தற்கொலை - காதல் தோல்வி காரணமா என போலீசார் விசாரணை
- வேங்கைவயல் விவகாரத்தில் ஆயுதப்படை காவலர் உட்பட இருவரிடம் குரல் பதிவு சோதனை - இறுதி விசாரணை அறிக்கையை பதிவு செய்ய கால அவகாசம் கேட்ட சிபிசிஐடி
- காவல் நிலையத்திற்கு வருபவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் - அம்பாசமுத்திரத்தில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி
- ஆரூத்ரா நிறுவனத்தின் நிர்வாகி வீட்டில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சோதனை - 90 மூட்டைகளில் ஆவணங்கள் பறிமுதல்
- ஆரூத்ரா வழக்கில் அனுப்பப்பட்ட அழைப்பாணைக்கு தடை விதிக்கக்கோரிய நடிகர் ஆர்.கே.சுரேஷின் கோரிக்கை நிராகரிப்பு
- நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா? - தொகுதிவாரியாக வாக்காளர் விவரங்களை அனுப்புமாறு நிர்வாகிகளிடம் கேட்டுள்ள மக்கள் இயக்கம்
இந்தியா:
- பிறை தென்பட்டதால் நாடு முழுவதும் இன்று ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் - மசூதிகள், பொது இடங்களில் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு
- ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்
- சூடான் நிலவரம் குறித்து உயர்நிலை குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை - இந்தியர்களின் நிலைமையை உன்னிப்பாக கவனிக்குமாறு அறிவுறுத்தல்
- கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பின் இருவர் மனு ஏற்பு - ஓபிஎஸ் தரப்பு நபர் அதிமுக வேட்பாளராக போட்டியிட அங்கீகாரம், புலிகேசி நகரில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் போட்டி
- பிரதமர் மோடியின் வருகையால் சட்டசபை தேர்தலில் தாக்கம் ஏற்படாது என எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கருத்து
- பெங்களூருவில் உள்ள பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் இறந்த குட்டியை வெளியே எடுத்தபோது தொற்று பாதித்து தாய் யானை உயிரிழப்பு
- ஜம்முவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த ரோகிங்கியா அகதிகள் 5 பேர் கைது
உலகம்:
- டொமினிக் ராப் ராஜினாமா - இங்கிலாந்து துணைப் பிரதமராக ஆலிவர் டவுடன் நியமனம்
- சூடானில் ஏற்பட்டுள்ள ராணுவ மோதலில் பலி எண்ணிக்கை 413 ஆக அதிகரிப்பு
- அமெரிக்காவில் பெட்ரோல் பங்கை கொள்ளையடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்ற இந்தியர் சுட்டுக்கொலை
- உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில் தற்காலிகமாக 72 மணி நேரத்துக்கு சண்டையை நிறுத்த முடிவு
விளையாட்டு:
- ஐபிஎல் தொடர்: ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- மும்பைக்கு அடுத்து சென்னை சேப்பாக்கம் தான் எனக்கு பிடித்த மைதானம் என முன்னாள் இந்திய அணி வீரர் சச்சின் கருத்து
- ஐரோப்பா லீக் கால்பந்து தொடரில் மான்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி செவில்லா அணி அரையிறுதிக்கு தகுதி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion