மேலும் அறிய
Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..
கேரளாவில் வானிலை ஆண்டு முழுவதும் மிகவும் ரம்மியமாக இருக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் கேரளாவின் அழகை ரசிக்க கோடி கண்கள் வேண்டும்.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்.. Monsoon experience in Kerala: Best Experiences to enjoy Monsoon Tourism in Kerala Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/d552c087adeaa669d4cd206aebb29c941658669255_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேரளா சுற்றுலா
தென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் அழகான சுற்றுலா தளம் கேரளா. அங்கு வானிலை ஆண்டு முழுவதும் மிகவும் ரம்மியமாக இருக்கும். மழைக்காலங்களில் கேரளாவில் ரசிக்க கூடிய இடங்கள் பல இருந்தாலும் சிறந்த இடங்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம்.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/38046deadc94768af57f7b82c027bc231658669381_original.jpg)
கொட்டும் அருவிகள்:
மழைக்காலங்கள் தான் கேரளாவில் உள்ள நீர்வீழ்ச்சிகளின் அழகை ரசிக்க உகந்த காலமாகும். அவை மிகவும் அழகாக காட்சியளிக்கும். கொச்சியில் இருந்து சுமார் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது வாழச்சல் மற்றும் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இது கண்டுகளிக்க ஒரு சிறந்த இடமாகும்.
மலை பிரதேசங்கள்:
கேரளாவில் ரசிக்க கூடிய ஏராளமான மலைஸ்தலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த மலைஸ்தலங்கள் இயற்கை அழகோடு பசுமையான வேறொரு உலகமாக மாறிவிடும். மூணாறு, தேகடி, மலம்புழா போன்றவை புகழ் பெற்ற மலைஸ்தலங்கள் ஆகும்.
கேரளாவில் ரசிக்க கூடிய ஏராளமான மலைஸ்தலங்கள் உள்ளன. மழைக்காலங்களில் இந்த மலைஸ்தலங்கள் இயற்கை அழகோடு பசுமையான வேறொரு உலகமாக மாறிவிடும். மூணாறு, தேகடி, மலம்புழா போன்றவை புகழ் பெற்ற மலைஸ்தலங்கள் ஆகும்.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/a8cc2d6c53dee6155e834bd6d544c46e1658669406_original.jpg)
டிரைவிங் :
பலருக்கு டிரைவிங் செய்வது மிகவும் பிடிக்கும். அதுவும் மழைக்காலத்தில் கேரளா சாலைகளில் வாகனத்தை ஓட்டி செல்வது புத்துணர்ச்சியையும் புதிய அனுபவத்தையும் கொடுக்கும். கேரளாவில் மழைக்காலங்களில் சுய-ஓட்டுநர் சுற்றுப்பயணங்கள் மிகவும் பிரபலம்.
ஆயுர்வேத சிகிச்சை:
புகழ்பெற்ற ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு உலகெங்கிலும் மிகவும் பிரபலமான இடம் கேரளம். உங்கள் விடுமுறையை கேரளாவில் என்ஜாய் செய்யும் போது நிச்சயமாக கஸ்டமைஸ்டு மசாஜ்களை தவறவிடாதீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இங்கு பலவகையான ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளன.
புகழ்பெற்ற ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு உலகெங்கிலும் மிகவும் பிரபலமான இடம் கேரளம். உங்கள் விடுமுறையை கேரளாவில் என்ஜாய் செய்யும் போது நிச்சயமாக கஸ்டமைஸ்டு மசாஜ்களை தவறவிடாதீர்கள். உங்களை ஆச்சரியப்படுத்தும் அளவிற்கு இங்கு பலவகையான ஆயுர்வேத சிகிச்சைகள் உள்ளன.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/44f304bfdcfef6d05bdb76a047589b671658669763_original.jpg)
ஓணம் பண்டிகை:
கேரளா மக்களின் மிகவும் முக்கியமான பண்டிகை ஓணம். இது பெரும்பாலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் கேரளா சுற்றுலாவை திட்டமிட்டால் மழைக்காலத்தையும் ஓணம் பண்டிகையையும் சிறப்பாக கொண்டாடலாம். இந்த மகிழ்ச்சி திருவிழாவில் பாரம்பரிய விளையாட்டுகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள், பாம்பு படகு போட்டிகள், வண்ணமிகு பூக்கோலங்கள் மற்றும் ஏராளமான பாரம்பரிய உணவுகளை சந்தோஷமாக அனுபவிக்கலாம்.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/f8f9d59f695b98f0dffe6917f7a36c7d1658669454_original.jpg)
ஏரிக்கரை அனுபவம்:
மழைக்காலங்களில் கேரளாவில் உள்ள ஏரிகளை சிறப்பாக பார்வையிடலாம். இயற்கை பிரியராக இருப்பின் ஆலப்புழாவில் உள்ள அழகிய அஷ்டமுடி ஏரி மற்றும் புன்னமடா ஏரி போன்ற சில முக்கியமான ஏரிகளுக்கு சென்று அழகினை ரசிக்கலாம்.
வனவிலங்கு சரணாலயங்கள்:
கேரளாவில் ஏராளமான வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன. நீங்கள் இயற்கை ஆர்வலர் அல்லது வனவிலங்கு ஆர்வலராக இருப்பின் இது சரியான தருணம். இங்கு வங்காள புலி, சிங்கவால் மக்காக், நீலகிரி தஹர் போன்ற பல விலங்குகளை அதன் வாழ்விடங்களில் சென்று காணலாம்.
![Kerala Monsoon : மழைநாட்களில் ரம்மியமா ஒரு அனுபவம் வேணுமா? கேரளாவில் இதெல்லாம் பெஸ்ட் இடங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/24/1b18e89ce1a914a799dbab2cb2dd4d561658669585_original.jpg)
உப்பங்கழியில் பயணம் :
கேரளாவின் மற்றுமொரு சிறப்பு உப்பங்கழியில் பயணம் செய்வது. பனை ஓலைகளால் ஆன வீடுகள், இயற்கை காட்சிகள் இவை மனதை கொள்ளை கொள்ளும். அங்கு தங்கியிருக்கும் போது கேரளா உணவு வகைகளை ருசிப்பது சிறப்பு.
ஜாலியா கேரளாவுக்கு டூர் போயிட்டு வாங்க! ஹேப்பி Journey!
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion