Monkeypox Virus India: கேரளாவில் அதிகரிக்கும் குரங்கு அம்மை! எண்ணிக்கை 3ஆக அதிகரிப்பு!!
கடந்த 13 ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 15 ஆம் தேதி முதல் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்த தொற்றால் இதுவரை 14 ஆயிரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் குரங்கம்மை நோய் என்பது தொற்று நோய் என்பதால் சர்வதேச நாடுகள் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் மற்ற நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மற்ற மாநிலங்களின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று யாருக்கும் ஏற்படவில்லை என்றும், தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து பன்னாட்டு விமானங்களும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அதேசமயம் இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு கேரளாவில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை 13 ஆம் தேதி துபாயிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருவுக்கு வந்த ஒருவர் கேரளாவின் கண்ணூரை அடுத்து உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏற்கனவே கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 3வதாக ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 35 வயது நபர் ஒருவர் கடந்த ஜூலை 6 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் மலப்புரத்திற்கு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 15 ஆம் தேதி முதல் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Country's third #monkeypox confirmed in a 35-yr-old man who returned to Mallapuram from UAE on July 6th. He was admitted with fever at Manjerry Medical College Hospital on 13th & from 15th he began showing symptoms. His family & close contacts under observation: Kerala Health Min pic.twitter.com/Aa8yco2d1H
— ANI (@ANI) July 22, 2022
இதனிடையே அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிப்பில் உள்ளதாக கேரள சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ள 3 பேரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்