மேலும் அறிய

பெகசஸ் விவகாரத்தில் மறைக்க ஒன்றுமில்லை என்றால்.. இதை செய்யுங்க...! - சுப்ரமணியன் சுவாமி

பெகசஸ் விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று பாஜக ராஜ்ய சபா உறுப்பினர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பிரபல ஸ்பைவேர் நிறுவனமான என்.எஸ்.ஓ உருவாக்கிய பெகாசஸ் செயலி இப்போது இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலி மூலம் இந்தியாவின் சட்ட வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் உளவு பார்க்கப்பட்டுள்ளன.  இந்த விவகாரம் தொடர்பாக ஆங்கில பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனத்தை பதிவு செய்து வந்தனர். 

இந்நிலையில் பாஜகவின் மாநிலங்களவை எம்பியான சுப்ரமணியன் சுவாமி இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ச்சியாக ட்வீட் செய்து வருகிறார். அதில், "பெகசஸ் விவாகரத்தில் நாம் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் இதுகுறித்து இஸ்ரேல் பிரதமருக்கு மோடி கடிதம் எழுத வேண்டும். அதன்மூலம் யார் உண்மையில் இந்தியாவில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே பெகசஸ் ஸ்பைவேரை ஒப்பந்தம் மூலமே பயன்படுத்த முடியும் என்பது தெளிவாக தெரிகிறது. ஆகவே இந்தியாவில் இருப்பவர்களை உளவு பார்ப்பதற்கு யார் இந்த ஒப்பந்தம் செய்து வாங்கினார்கள்? இந்திய அரசு அதை வாங்கவில்லை என்றால் வேறு யார் இதை வாங்கினார்கள்? என்பதை மோடி தலைமையிலான அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த கடமை பட்டுள்ளது" எனப் பதிவிட்டிருந்தார். அத்துடன் மத்திய உள்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் இந்த விவாகரம் தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா, மாநிலங்களவை எதிர்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே மற்றும் மக்களவைக் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், பெகசஸ் உளவுக்குப் பின்னால்  இருப்பது இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் காரணம் என்று குற்றம் சாட்டியும், உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதோடு பெகசஸ் செயலின் மூலம் உளவுபார்க்கும் செயல் என்பது, இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் பாதுகாப்புடன் விளையாடியுள்ளதாகவும், இந்த உளவுபார்க்கும் செயல் நிச்சயம் வெட்கக்கேடானது என விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் இப்பிரச்சனைக்குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு விவகாரம் சரியாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு ஒரு நாளைக்கு முன்னதாக வெளியானதால் எவ்வித பின்னணியும் இல்லை எனவும் ஊடகங்களில்தான் செய்தி வெளியாகியிருக்கிறது. ஆகையால் இதனை கூட்டத்தொடரொடு தொடர்புப்படுத்தி பார்க்கத் தேவையில்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க:  ஆபாசப்படம் தயாரிப்பு.. ஷில்பா ஷெட்டிக்கு தொடர்பா? - மும்பை போலீசார் விளக்கம்..!

தலைப்பு செய்திகள்

ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
ஆன்லைன் பரிவர்த்தனை: வருமான வரி நோட்டீஸ் வராமல் தடுக்க இதைச் சரிபார்க்கவும்!
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
வரிசைக்கு குட்பை! சத்தீஸ்கரில் ரேஷன் ஏடிஎம்: தமிழகத்திலும் வருமா?
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
மஹிந்திரா கார்களுக்கு ஆகஸ்ட் அதிரடி தள்ளுபடி: ரூ.1.25 லட்சம் வரை சலுகை! முந்துங்கள்!..
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
நல்ல சாவே வராது.. வன்மத்தை கக்கும் திமுக தலைவர்கள்! அடக்கி வைப்பாரா மு.க.ஸ்டாலின்?
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
‘பாஜகவிடம் கொத்தடிமையாக..’ திமுகவை விளாசிய அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார்..!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
ரூ.100 கோடி பழனி நில மோசடி: கைதான சார் பதிவாளருக்கு ஆஞ்சியோ; 2 புதிய அடைப்புகள்!
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
தாமிரபரணிக்கு ரூ.59 கோடி வீண்: சாக்கடையை தடுக்காமல் கரையை அழகுபடுத்துவதா? அன்புமணி கேள்வி
CM Vijay: முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? CM விஜயின் சுதந்திர தின உரை மீது எதிர்பார்ப்பு - யாருக்கு ஜாக்பாட்?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Embed widget